. எழுக தமிழ் – Jaffna Journal

பேரணி தோல்வியென குறிப்பிடுபவர்கள், பேரணி தோல்வியடைய வேண்டுமென விரும்பியவர்கள்தான்!! : விக்னேஸ்வரன்

எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்ததாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பேரணியில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். வவுனியா, கிளிநொச்சி, கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து நிறைய மக்கள் வந்திருந்தார்கள். இதுவே பெரிய வெற்றிதான்.... Read more »

வடக்கு கிழக்கு இணைந்தாலே தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் – சுரேஷ்

வடக்கு கிழக்கு இணைந்து ஒரு மாகாணமாக ஆக்கப்பட்டாலேயே தமிழ் மக்களின் இந்த மண்ணில் பாதுகாக்கப்படுவார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும்... Read more »

இந்தியா தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!!

குரூர் ப்ரம்மா… எனதினிய தமிழ் மக்களே! பல்லாயிரக்கணக்கில் இங்கே வருகை தந்துள்ள அனைத்து உறவுகளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை முதற்கண் கூறி வைக்கின்றோம். “அழுத குழந்தையே பால் குடிக்கும்” என்பார்கள். குழந்தை அழுதால்தான் தாய்க்கு அதன் பசி பற்றி பொதுவாக நினைவுவரும். “அழுதால் உன்னைப்... Read more »

சர்வதேசமே! இலங்கையில் தமிழர் மீதான இனவழிப்பு விசாரணையை நடத்து!!! – எழுக தமிழ் பிரகடனம்

அன்பான தமிழ் மக்களே, இன்று நாம் முன்னெப்போதும் இல்லாதவாறு சிங்கள பேரினவாதத்தின் திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு கிடக்கின்றோம். தமிழ் மண் சிதைவுற்றுள்ளது. தமிழரின் குடித்தொகை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கில் இருந்து கிழக்கு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடன் எமது தாயகம் தேர்தல்... Read more »

எழுக தமிழ் பேரணி முற்றவெளியை வந்தடைந்தது!!

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலை வந்தடைந்தது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி இன்று முற்பகல்... Read more »

எழுக தமிழ்-2019 ஏற்பாடுகள் குறித்த ஊடக அறிக்கை

முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைக்கப்பட்ட தமிழர் உடல்களோடு உடலாக, அனைத்துலக மனித உரிமை கோட்பாடுகளையும், வரையறைகளையும், நியமங்களையும், நம்பிக்கையினையும் சேர்த்தே புதைக்கபட்டுவிட்டதை இன்றளவும் மெய்ப்பிப்பதாகவே தமிழினப் படுகொலைக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது. போர் வலயத்தில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று குரல்... Read more »

தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!!

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறும் எழுக தமிழ் எழுச்சி பேரணியை முன்னிட்டு, தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்பின மூலம் வழமை மறுப்பு போராட்டத்தை மேற்கொள்ள தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்கும் வகையில் நடைபெறுகின்ற எழுக... Read more »

பொது அமைப்புக்களுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!!

எழுக தமிழ் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. போர்க்குற்ற விசாரணையை நடாத்து, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய், வடக்கு- கிழக்கில் இராணுவ மயமாக்கலை... Read more »

கஜேந்திரகுமார் மீண்டும் பேரவையோடு இணைந்துகொள்வார் – விக்கி நம்பிக்கை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்காலத்தில் எம்முடன் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். யாழில்... Read more »

கட்சிகளுக்கு அப்பாற்பட்டதாக நடைபெறவுள்ளது எழுக தமிழ் – சுரேஸ்

யாழில் நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணியானது கட்சிகளுக்கு அப்பாற்பட்டதாக நடைபெறவிருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் கலந்து கொண்டு தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால்... Read more »

எழுக தமிழ் பரப்புரைகளை நல்லூரில் ஆரம்பித்து வைத்தார் விக்னேஸ்வரன்!!

எழுக தமிழ் 2019, பரப்புரை பணிகள் இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் நல்லூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது எழுக தமிழ் எழுச்சிப் பேரணி அடுத்தமாதம் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த எழுச்சிப் பேரணிக்கு தாயக மக்களை அணிதிரட்டும் பரப்புரைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு... Read more »

எழுகதமிழ் நிகழ்வில் தர்மலிங்கம் சுரேஸ் அவர்கள் ஆற்றிய உரை

தென்தமிழீழ மண்ணில் இடம்பெற்ற எழுகதமிழ் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் அவர்கள் ஆற்றிய உரை எமது அரசியல் வேணவாவை வெளிப்படுத்த இங்கு பல்லாயிரமாக திரண்டிருக்கும் எனது அன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய மக்களே! இங்கு வருகைதந்திருக்கும் பெருமதிப்பிற்குரிய மதப்... Read more »

எழுக தமிழோடு இணைய பெண்கள் அமைப்புக்கள் முன்வரவில்லை

எழுக தமிழோடு இணைந்து கொள்வதற்கு பெண்கள் அமைப்புக்கள் துணிவோடு முன்வரவில்லை என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு எழுக தமிழ் நிகழ்வில் பெண்களுக்கு மேடையில் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி... Read more »

எமது உரிமைகளை ஜனநாயக ரீதியில் வென்றெடுப்பதற்காகவே எழுக தமிழ்

கிழக்கு எழுக தமிழ் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமாகிய நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றி உரையின் முழு வடிவம்.. ´எழுமின், விழிமின், இலட்சியத்தை அடையும் வரை நிறுத்தாதீர்கள்!´ என்றார் சுவாமி விவேகாநந்தர். கடோபநிஷதத்தில் வரும் சொற்களை உலகறியச் செய்தார் சுவாமி... Read more »

ஒற்றையாட்சி ; தமிழர்களுக்கான சாவு மணி

ஒற்றையாட்சி முறையிலான புதிய அரசியலமைப்பையே அரசாங்கம் முன்வைக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இவ்வாறு முன்வைக்கப்படும் அரசியலமைப்பானது தமிழர்களுக்கு சாவு மணியாக அமையவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்... Read more »

கிழக்கு எழுக தமிழ் பேரணி; எழுச்சியுடன் ஆரம்பம்

கிழக்கு மாகாண எழுக தமிழ் பேரணியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார். காலையில் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் காணாமல் போன உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளில் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். அங்கீகரி... Read more »

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்… தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுகதமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு... Read more »

எழுக தமிழ் பிற்போடப்பட்டது

மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார். இதன்படி, எதிர்வரும் 28ம் திகதி சனிக்கிழமை இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும்!

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தமிழ் சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. யாழ் மாவட்ட தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி வானதி காண்டீபன் இது தொடர்பாக அனுப்பி வைத்துள்ள செய்தி... Read more »

எழுக தமிழுக்கு அணிதிரளுமாறு அறைகூவல்!

வடக்குக் கிழக்கு மக்களின் அபிலாசைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்திக் கூற எதிர்வரும் 21ஆம் நாள் மட்டக்களப்பில் நடைபெறும் எழுக தமிழ் நிகழ்வில் அனைத்து மக்களையும் அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வசந்தராசா அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் எதிர்வரும்... Read more »