Ad Widget

ICC கிரிக்கட் விருது விபரம்: வருடத்தின் சிறந்த வீரர் ரவிசந்த்ரன் அஷ்வின்

இந்தியா அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்த்ரன் அஷ்வின் 2015 -16 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராகவும் இவரே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் சிறந்த வீரருக்காக வழங்கப்படும் Sir Garfield Sobers விருதை பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஷ்வினாகும். இதற்கு முன்னர் சசின் டென்டுல்கார் மற்றும் ராகுல் ட்ராவிட் ஆகியோர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.

தற்போதைய முதன்நிலை டெஸ்ட் பந்துவீச்சாளரான அஷ்வின் வாக்கெடுப்பு காலமான செப்டம்பர் 2015 – 2016 காலப்பகுதியில் 8 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 48 விக்கட்டுகளையும் 336 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். அத்துடன் 19 T20 போட்டிகளில் 27 விக்கட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

தென்னாபிரிக்கா அணியின் விக்கட் காப்பாளர் குயின்டன் டி கொக் வருடத்தின் ஓருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பு காலத்தில் 16 ஓருநாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இவர் 793 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 2015 செப்டம்பர் மாதத்திலிருந்து குயின்டன் டி கொக் 22 ஓருநாள் போட்டிகளில் 5 சதம் மற்றும் 3 அரைச்சதத்துடன் 1175 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவ்விருதைப் பெறும் இரண்டாவது தென்னாபிரிக்க வீரர் இவராவார் இதற்கு முன்னர் AB de Villiers இவ்விருதினைப் பெற்றிருந்தார்.

இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 பந்துகளில் ஆட்டமிளக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்தியத்தீவுகளின் சகலதுறை வீரர் கார்லொஸ் பரத்வெயிட் வருடத்தில் சிறந்த T20 வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான முஸ்டபிதுர் ரஹ்மான் வளர்ந்து வரும் கிரிக்கட் வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார். வாக்கெடுப்பு காலப்பகுதியில் இவர் 8 ஓருநாள் போட்டி விக்கட்டுக்களையும் 19 இருபதுக்கு இருபது போட்டி விக்கட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். ICC இன் வருடாந்த விருதைப் பெறும் முதல் வீரரும் இவராவார்.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் மொஹமட் செஸாட் வருடத்தின் இணைஅங்கத்துவ நாட்டு சிறந்த வீரருக்காக வழங்கப்படும் விருதைப் பெற்றார்.

அத்துடன் நியுஸிலாந்து மகளிர் அணியின் துடுப்பாட்ட வீராங்கனை சுஸி பேர்ட்ஸ் வருடத்தின் சிறந்த ஓருநாள் மற்றும் T20 வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

வருடத்தின் சிறந்த நடுவருக்காக வழங்கப்படும் David Shepherd விருதினை Marais Erasmus பெற்றதுடன் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் Spirit of Cricket விருதினையும் பெற்றனர்.

இவ்விருதுகளுடன் இணைந்த வகையில் வருடத்திற்கான டெஸ்ட் அணியும் ஓருநாள் அணியும் பெயரிடப்பட்டுள்ளது. இவற்றில் இலங்கை அணியின் முதல்நிலை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

ICC Cricketer of the Year (Sir Garfield Sobers Trophy) – Ravichandran Ashwin (India)
ICC Test Cricketer of the Year – Ravichandran Ashwin (India)
ICC ODI Cricketer of the Year – Quinton de Kock (South Africa)
ICC T20I Performance of the Year – Carlos Brathwaite (West Indies) (34 not out, 10 balls, 1×4, 4×6, ICC WT20 India 2016 final v England, Kolkata)
ICC Women’s ODI Cricketer of the Year – Suzie Bates (New Zealand)
ICC Women’s T20I Cricketer of the Year – Suzie Bates (New Zealand)
ICC Emerging Cricketer of the Year – Mustafizur Rahman (Bangladesh)
ICC Associate/Affiliate Cricketer of the Year – Mohammad Shahzad (Afghanistan)
ICC Spirit of Cricket Award – Misbah-ul-Haq (Pakistan)
ICC Umpire of the Year (David Shepherd Trophy) – Marais Erasmus (South Africa)
ICC Test Team of the Year 2016 – David Warner (Australia) , Alastair Cook (England) (captain) , Kane Williamson (New Zealand) , Joe Root (England) , Ben Stokes (England) , Adam Voges (Australia) , Jonny Bairstow (England) (wicketkeeper) , Ravichandran Ashwin (India) , Rangana Herath (Sri Lanka) , Mitchell Starc (Australia) , Dale Steyn (South Africa) , Steve Smith (Australia)
ICC ODI Team of the Year 2016 – David Warner (Australia), Quinton de Kock (South Africa) (wicketkeeper), Rohit Sharma (India), Virat Kohli (India) (captain), AB de Villiers (South Africa), Jos Buttler (England), Mitchell Marsh (Australia), Ravindra Jadeja (India), Mitchell Starc (Australia), Kagiso Rabada (South Africa), Sunil Narine (West Indies), Imran Tahir (South Africa)

(in batting order, selected by Rahul Dravid, Gary Kirsten and Kumar Sangakkara based on players’ performance in the period from 14 September 2015 to 20 September 2016)

ICC Women’s Team of the Year – Suzie Bates (New Zealand), Rachel Priest (New Zealand) (wicketkeeper), Smriti Mandhana (India), Stafanie Taylor (West Indies) (captain), Meg Lanning (Australia), Ellyse Perry (Australia), Heather Knight (England), Deandra Dottin (West Indies), Sune Luus (South Africa), Anya Shrubsole (England), Leigh Kasperek (New Zealand), Kim Garth (Ireland)

Related Posts