- Saturday
- August 22nd, 2026
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிழந்தவர் புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்பவராவார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...
யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்களை அவமதிக்கும் சட்ட ஏற்பாட்டின் கீழ் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த வழக்கே தள்ளுபடி...
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய 12.5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,790 ரூபாவாகும். 5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அதன் புதிய விலை...
2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற இணையத் தளப் பக்கத்தில் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346,976 பரீட்சாத்திகள் நாடு...
யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படகுச்சேவையானது, கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரைப்பாதை இல்லாத நயினாதீவு , நெடுந்தீவு , எழுவை தீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளுக்கும் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்தன. பொருளாதார நெருக்கடி மற்றும்...
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் பரீட்சைக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சை திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் உயர்தரப் பரீட்சை ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றதுடன் அதற்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 42,883.ஆகும்...
பண்டத்தரிப்பு பகுதியில் கணவருடன் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த குடும்ப பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 61 வயதான சரோஜினி தேவி அல்பேர்ட் வில்லியம் என்பவரே உயிரிழந்துள்ளார் குறித்த குடும்பப்பெண் கடந்த சில தினங்களாக சுகவீனமடைந்திருந்த நிலையில் நேற்றைய...
யாழ் போதனா வைத்தியசாலையின் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி தாக்குதலில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், இனிவரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான குறித்த நடவடிக்கை ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற...
சுழிபுரம் காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினையடுத்து கைவிடப்பட்டுள்ளது. சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள 4 பரப்பு தனியார் காணியினை நில அளவைத் திணைக்களம் கடற்படையினரின் காணி சுவீகரிப்பிற்காக காட்டுப்புலத்திற்கு வருகை தந்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில், நாடாளுமன்ற...
யாழில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு சென்றுள்ளனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் 4 வருட காலமாக இராணுவத்தினர் முகாம் அமைத்து இருந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த காலப்பகுதிக்கான மின்சாரக் கண்டனத்தை அவர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர் எனவும், நிலுவையாக...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டடம் திறக்கப்பட்டு 05 வருட பூர்த்தியை முன்னிட்டு 29 ஆம் திகதி புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், “மருத்துவ துறையினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களின் சேவையை...
யாழில் மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி அடித்து துன்புறுத்தியதாக கூறி 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்த மாணவிகள் 11 பேர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அதனை...
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்சை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி அமைச்சர் கிரிஸ்டோபர் மக்லணன் (Christopher MacLennan) உள்ளிட்ட குழுவினர் 28ஆம் திகதி புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்கள். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நல்லிணக்கச் செயற்பாடுகள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், காணிவிடுவிப்பு,...
டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. டென்மார்க்கில் வேலைவாய்ப்பு தொடர்பான முகநூல் பக்கத்தில் இந்த மோசடி தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த போலி விளம்பரத்தில், நோயாளிகளை பராமரிக்கும் பணியாளர்கள், செவிலியர்கள், பேக்கிங் தொழிலாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், பாதுகாவலர்கள், கட்டுமான...
கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பார்சலில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது. இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனினால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் ஏற்கனவே...
யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் பிரதியாக்க இயந்திரங்கள் (போட்டோ கொப்பி) பழுதடைந்துள்ளமையால் சேவை பெற செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் திணைக்களத்தில் காணிகளுக்கான தோம்பு மற்றும் உறுதி பிரதிகளை வழங்கும் ஒருநாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இயந்திரங்களை விற்பனை செய்த நிறுவனங்களே விற்பனைக்கு பிந்திய சேவைகளை வழங்குவதானல், அவர்களே பழுதுகளை சரி செய்ய ஊழியர்களை...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் காயமேற்பட்ட ஒருவரை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒருவர் நுழைந்துள்ளார். சந்தேகநபர், வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஒருவருடனே இவ்வாறு உந்துருளியில்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்த நபர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. வாள்வெட்டுக்கு...
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரித்து உள்ளதாகவும், திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் சில மாதங்களில் 32 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. அவை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விசாரணைகளின்போது , திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உடனேயே...
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூதன் வயல் கிராமத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இருபெண்கள் உள்ளிட்ட மூவரை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த இளைஞனை வவுனியா ஆச்சிகுளம் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பபெண் திருமணம் செய்து 7 மாதங்களாக...
Loading posts...
All posts loaded
No more posts
