- Saturday
- June 13th, 2026
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் யாழ் மறை மாவட்ட ஆயரிற்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. யாழ் மறை மாவட்ட ஆயருடனான சந்திப்பில் நாமல் ராஜபக்ச மற்றும் அவர் தரப்பை சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் 15...
10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் (10) 3.00 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பிரச்சாரக்...
தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை நடத்தியதாக...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்வரும் 18ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கூட்டத்தில் இந்தத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகதபால தெரிவித்துள்ளார்.
காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்;குதலில் ஐநாவின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 கொல்லப்பட்டுள்ளனர். விமானதாக்குதல் இடம்பெற்றது என ஐநா தெரிவித்துள்ளது. காசாவின் மத்தியில் உள்ள நுசெய்ரட்டின் இரு பாடசாலைகள் தாக்கப்பட்டன,கொல்லப்பட்டவர்களில் பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநாவின் அமைப்பின் புகலிடத்தின் முகாமையாளர் உட்பட பலர் உள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது....
யாழில் டிப்பர் மோதியதில் செவ்வாய்க்கிழமை (10) கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பரிதாபமாக உயரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வினுதா விஜயகுமார் (வயது 17) என்ற உயர்தரப் பிரிவு மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; குறித்த மாணவி நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் தனியார் கல்வி நிலையத்திற்கு...
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழ் இந்த சாதனையை படைத்துள்ளார். இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை ஒன்றின் மேல் ஒன்றாக 59 செக்கன்களில் அடுக்கி முடித்தே குறித்த சாதனையை புரிந்துள்ளார்....
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச பாடசாலைகளும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 24 வரை மூடப்பட்டிருக்குமென கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தமிழரசுக்கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் சர்ச்சைகள் நிலவுவதாகவும், எனவே எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள மத்திய குழுக்கூட்டத்தில் இதுபற்றி ஆராய்வதற்கும், அதனைத்தொடர்ந்து தெளிவான ஊடக அறிக்கையொன்றை வெளியிடுவதற்கும் உத்தேசித்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாட்டின்...
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் திங்கட்கிழமை (09) சந்தித்து கலந்துரையாடினர். ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் எரிவாயு சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்லதற்கு தயாராக இருந்த 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை கட்டி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பேரணியாக செல்லத்...
கண்ணாடி துண்டுகள் வெட்டியதற்கு உரிய சிகிச்சை பெறாததல் கிருமி தொற்று ஏற்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை சேர்ந்த தயாரூபன் உதயகுமாரி (வயது 50) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு மாத கால பகுதிக்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு காலில் கண்ணாடி துண்டுகள் வெட்டி உரிய சிகிச்சை பெறாதமையால் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு...
நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக மைதானத்தை பெறுவதில் சகோதரர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நெல்லியடியில் உள்ள மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தேர்தல் பிரச்சார கூட்டம் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது. குறித்த மைதானத்தில் எதிர்வரும் வாரம் எதிர்க்கட்சி தலைவரின் பிரச்சார...
இளம் பெண்ணின் டிக்டொக் வீடியோக்களைப் பார்த்து ஏமாந்த 52 வயதுடைய ஒருவர் 45 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் 52 வயதான நபரே இச்சம்பவத்திற்கு...
இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று புதன்கிழமை (04) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைய அலுவலகங்கள், மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், சிறப்பு அதிரடிப்படை...
நேற்றிரவு வன்முறை கும்பல் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன் போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு...
சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி பகுதியில் கடந்த முதலாம் திகதி (1) இரவு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாவடி தெற்கு பத்திரகாளி கோவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரவு 9:30 மணி அளவில் உள் நுழைந்த மர்ம நபர்கள், இளைஞன் மீது வாள் வெட்டினை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில்...
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மைதானத்துடன் யாழ்ப்பாண இளைஞர்களுக்கான விளையாட்டு மேம்பாட்டு திட்டமும்...
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றையதினம் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்....
மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று புதன்கிழமை (04) அதிகாலை இரண்டு இளைஞர்கள் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது. இந்நிலையில் படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த...
Loading posts...
All posts loaded
No more posts
