- Thursday
- August 27th, 2026
பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி, பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான போக்குவரத்தினை எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். குறித்த விமான சேவை தொடர்பில் இந்திய விமான...
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூறிய பின்னர் நஷ்ட ஈடு பற்றி கதையுங்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டை 2 இலட்ச ரூபாயாக...
இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இழப்பீட்டு அலுவலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ள நிலையில் அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் கண்டனங்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்...
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச நாடுகளும் காலக்கெடுவை விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமிழ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஐ.நா.விலும்...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீரச் சாவடைந்த முதல் பெண் போராளி 2ம் லெப்டினன்ட் மாலதி (பேதுருப்பிள்ளை சகாயசீலி)யின் நினைவேந்தல் இடம்பெற்றது. 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி கோப்பாய் கிறேசர் வீதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் அவர் வீரச்சாவடைந்தார். நேற்று மாலை 6 மணிக்கு மாலதி வீரச்சாவடைந்த இடத்தில் மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டது. வேலன்...
இலங்கையில் விசேட வைத்தியர்களின் தேவையில் 45 சதவீதம பற்றாக்குறை நிலவுகின்ற போதில் 249 விசேட வைத்திய நிபுணர்கள் ஒரே நாளில் ஓய்வு பெறவுள்ளனர். இதன் காரணமாக வைத்தியசாலை கட்டமைப்பு கடும் நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான சிறப்பு மருத்துவர்கள் ஓய்வு பெறுவதால், மருத்துவப்...
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கட்டணத்தை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிட்டுள்ளார். அதன்படி, புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தல் ஆகியவற்றுக்கான கட்டணம்...
யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலைகள் நேற்று (ஞாயிற்க்கிழமை) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதற்கமைய அகில இலங்கை சைவமா சபையினால் உருவாக்கப்பெற்ற விபுலானந்தரின் திருவுருவச்சிலையினை தென் கையிலை ஆதின குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் திறந்து வைத்தனர். அதேபோல் மகாகவி சுப்பிரமணிய பாரதியாருடைய திருவுருவ...
பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை மூன்று வருடங்களுக்குப் பின்னர் அடுத்த வார தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த தகவலை கொழும்பு ஆங்கில வார இதழான சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ளது. பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணம் கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணங்களை விட கணிசமாகக் குறைவாக இருக்கும் என விமான சேவை...
கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பகுதிகளில், ரயில்களில் பல கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பயணிகளை காயப்படுத்தும் வகையில் சில கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆதரவுடன் அவசர பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்....
யாழில் இயங்கி வரும் ஆயுதமேந்திய கும்பலைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் மூன்று கூரிய வாள்களுடன் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்.பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், தாவடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....
நாடளாவிய ரீதியில் உள்ள வங்கிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீலாதுன் நபி தினம் நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு இன்று வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். அத்தோடு, பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என...
இன்றைய வானிலை குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது எனவும்...
அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த போது அவர் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒன்றிணைந்து நிற்போம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் நேற்று முனதினம்...
கொழும்பில் இருந்து சென்ற விசேட நில அளவையாளர் குழுவொன்று இரகசியமாக குருந்தூர் மலையில் நில அளவை செய்வதாக தகவல் வெளியாகிய நிலையில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஸ் உள்ளிட்டோர் குருந்தூர்மலை அளவீட்டை தடுத்து நிறுத்தும் நோக்கோடு அப்பகுதிக்கு சென்றுள்ளனர். கொழும்பிலிருந்து சென்ற விசேட நில...
கொக்குவில் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த செ. ரதீஸ்குமார் (வயது 41) என்பவரே தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு கொக்குவிலில் பகுதியில் இருந்து அச்சுவேலியில் உள்ள...
லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 430 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு தற்போது 395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை, 35 ரூபாயினால்...
நாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில் நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார். மருந்து தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் பல புதிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும்...
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். எங்களுக்கு வன்முறைகள் தேவையில்லை. இளைஞர்களை வழி மாறி போக விடாமல் எமது கட்டுப்பாட்டுக்குள் நேர்கோட்டில் பயணிக்க வைக்க வேண்டும் என்பது எமது விருப்பம் என அக் கட்சியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா...
தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசினால் வழங்கப்படும் அனர்த்த இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய அனைத்து விபரங்களும் தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் இறப்பு சான்றிதழ் கிடைக்கப்பெற்றதுடன் அரசினால் வழங்கப்படும்...
Loading posts...
All posts loaded
No more posts
