இந்திய ரூபாய் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை தெளிவுபடுத்தி இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது...

வல்வைப்படுகொலைகளின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

இந்திய இராணுவத்தினால் 63 தமிழ் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (02.08.2023) வல்வெட்டித்துறையில்அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தினால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,...
Ad Widget

தீயில் கருகிய 2000 பனை மரங்கள்!!

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் உள்ள பனைக்காட்டில் நேற்று (01) ஏற்பட்ட தீயினால் சுமார் 2000 பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த பனை காட்டை அண்டிய தனியார் பண்ணை ஒன்றின் தொழிலாளர்கள் குழுவொன்று தோட்டத்தின் குப்பைகளுக்கு தீ வைத்துள்ளதுடன் பனைக்காடு நோக்கி தீ பரவியதால் பனைக்காடு தீக்கிரையாகியுள்ளது. தீயினால் சேதமடைந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள்...

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவோம் – இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கை - இந்திய ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொருளாதார அபிவிருத்தி, அரசியல் தீர்வு உள்ளடங்கலாக சகல அம்சங்களையும் அமுல்படுத்jத வேண்டும் என்பதை இலங்கைக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர்...

வவுனியா இரட்டைக்கொலை – படுகொலைக்கான காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்கு தீ வைத்து தம்பதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 23ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவின் போது வீட்டுக்குள் புகுந்த 8 பேர், அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி, வீட்டிற்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. அங்கு வீட்டில்...

அராலியில் மணல் கொள்ளை: ஒன்று திரண்ட மக்கள்

கடல் நீர் உட்புகாத வகையில் வயல் வெளிகளை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண் மேடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மண்ணை வெட்டி எடுத்து சென்ற டிப்பர் வாகனங்களில் ஒரு வாகனத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் அராலி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அராலி பகுதியில் கடற்கரையை...

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்!! – எம்.ஏ. சுமந்திரன்

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கு தொடர்பாக தாம் விவாதித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பின் 13வது திருத்தம், மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது...

யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!!

”தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வுப் பயண செயற்பாட்டின்” 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று யாழில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில், இடம்பெற்ற இப் போராட்டமானது யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக...

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர். தகவல் அறிந்த தமிழக கடற்படையினர் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இவ்வாறு...

யாழ்ப்பாணம் என்பது அருள் பூமி! தென்னிந்திய திரைப்பட நடிகை கஸ்தூரி

யாழ்ப்பாணம் என்பது சைவமும் தமிழும் கொட்டி கிடக்கின்ற ஒரு அருள் பூமி என தென்னிந்திய திரைப்பட நடிகையும் பேச்சாளருமான கஸ்தூரி தெரிவித்துள்ளார். தாவாடி அம்பலவான முருகன் ஆலயத்தின் திருமஞ்ச திருவிழா ( 29.07.2023) இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணம் என்பது அருள் பூமி. இலங்கை முழுவதுமே...

எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம்!!

எரிபொருள் விலையில் அடுத்த மாதம் மாற்றங்கள் ஏற்படலாம் என இலங்கை கனியவள கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. கனியவள மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். மேலும், நாடளாவிய ரீதியாக செயற்படும் எரிபொருள் நிலையங்கள் 50 சதவீதமான கையிருப்பினை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

மனித புதைக்குழி விவகாரம் : முல்லைத்தீவில் பாரிய பேரணி முன்னெடுப்பு!

மனித புதைக்குழி விவகாரத்தில் சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று பாரிய பேரணியொன்று இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது. இதில், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதகுருமார், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஹர்த்தாலுக்கு, வர்த்தகர் சங்கங்கள், தனியார் பேருந்து...

வல்வெட்டித்துறையில் அடுத்தடுத்து 5 முதலைகள் பிடிபட்டன!!

ல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்த நிலையிலேயே நேற்றைய தினம் குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஆற்று நீரேரியில் 4 முதலைகளும் கொம்மந்தறை பகுதியில் உள்ள நீர் சகதியில் ஒரு முதலையும் பிடிக்கப்பட்டுள்ளதாகத்...

புத்தசாசன அமைச்சர் யாழிற்குத் திடீர் விஜயம்!

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணத்திற்கு தீடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். கடற்படையின் விசேட படகு மூலம் நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டத்தினை அமைச்சர்...

மாகாண சபை தேர்தல் தேவையில்லை! -எம்.ஏ. சுமந்திரன்

மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (27) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று (26) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியால் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக உரையாடுவதற்கு என்று கட்சி தலைவர்களுக்கு...

காணி சுவீகரிப்பு முயற்சி; பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம், செம்பியன்பற்று வடக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக வழங்கும் நோக்குடன் தொடர்ந்து 4 ஆவது நாளாக நேற்று (27) காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது. அதே சமயம் இந்நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத்தெரிவித்து வந்த நிலையில் குறித்த முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற...

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பெண் செயற்பாட்டாளர் வீட்டிற்குள் புகுந்து பொலிஸார் அடாவடி

சகாயபுரம் மாதகல் பகுதியில் வசிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணிச் செயற்பாட்டாளர் ராஜினி அவர்களது வீட்டினுள் 27-07-2023 நள்ளிரவு வேளையில் பி.ப 10.45 மணியளவில் இளவாலைப் பொலீசார் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவில் இடம்பெறவுள்ள மனிதப் புதைகுழிககு சர்வதேச நீதிகோரும் போராட்டத்திற்கு பொது மக்களைத் தயார்ப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த கட்சியின் மிக...

நல்லூர் உற்சவத்தையொட்டி புகையிரத சேவைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!

நல்லூர் உற்சவத்தையொட்டி தினசரி புகையிரதச் சேவைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம்திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளதால், பக்தர்களின் நலன் கருதி தினசரி புகையிரத சேவைகளை அதிகரிக்குமாறு நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தின் பொது முகாமையாளர் புகையிரத திணைக்களத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிய தந்தையால் சிறுமி துஷ்பிரயோகம்!!

சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவது தடவையாக திருமணம் செய்து கொண்டு தனது முதல் தாரத்தின் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அப் பெண்ணின் இரண்டாவது கணவர், 13 வயதான அப்பெண்ணின் மகளை துஷ்பிரயோகத்துக்கு...

நாளையதினம் முடங்கப்போகும் வடக்கு கிழக்கு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட உள்ளது. பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதேவேளை நாளைய தினம் வெள்ளிக்கிழமை வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts