- Tuesday
- June 16th, 2026
NORTHERNUNIஇன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தகதி யாழ்ப்பாணம் முத்தவெளிஅரங்கிலே இடம்பெறவுள்ளது. இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. ஊடக சந்திப்பில் தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர்...
இலங்கையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர். பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மஹாவலி உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து அடையாளம் தெரியாத சிலந்தி வலை போன்ற வெள்ளை நூல் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நேற்றுமுன்...
அம்பேபுஸ்ஸ - திருகோணமலை வீதியில் தலகிரியாகம பகுதியில் மோட்டார் சைக்கிளும் ரிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாக தலகிரியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 24 வயதான பெண் பொலிஸ் கான்ஸ்டபிளான...
யாழ்ப்பாணத்தில் இன்று காலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ் நகரில் முடிவடைந்தது. அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (10) செவ்வாய்க்கிழமை கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி துண்ணாலை பகுதியில், நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பாட்டார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் குறித்த நபருக்கு தொடர்பு இருப்பதாவும், வவுனியாவை சேர்ந்த நபர் நீண்ட...
2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளது. பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவிருந்த...
ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(10-10-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷ், மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர் மற்றும் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்....
வலிகாமம் மேற்கு சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவு வேளை அத்துமீறி நுழைந்த குழு ஒன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை இரவு சங்கானை பொதுச்சந்தை பாதுகாப்பு நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புக் கடமையாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன் போது, அங்கு வந்த போதையில் இருந்தவர்கள்...
ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைகான மேலதிக வகுப்புகளை நாளை நள்ளிரவின் பின்னர் நடத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை நாடளாவிய ரீதியில் இரண்டாயிர்தது 888 பரீட்சை மத்திய நிலையங்களில் எதிர்வரும் 15 ஆம் திகதி தரம்...
இந்தியா - இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை இன்று ஆரம்பமாவிருந்த நிலையில் திடீரென பிற்போடப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகம் நாகப்பட்டினம் - இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை இன்று (10) ஆரம்பமாகவிருந்த நிலையில் தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. செரியாபாணி கப்பலின் பரீட்சார்த்த...
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வவுனியா வெளிக்குளம் பகுதியில் திங்கட்கிழமை (9) இரவு 9.30 மணியளவில் ஏற்பட் விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை (9) 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான...
வடக்கு,கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு முஸ்லிம் தரப்பின் பூரண ஆதரவுடன் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்த அழைப்பு விடுத்துள்ளதோடு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புக்களையும் கோரியுள்ளன. வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கான இறுதி திகதியை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (09) யாழ்.தந்தை செல்வா அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு அரசியல் கட்சிகளின்...
யாழ்ப்பாணத்தில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் யாழப்பாணம் - ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் நேற்று (08.10.2023) இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் அச்சுவேலி - தோப்பு பகுதியைச் சேர்ந்த 39 வயதையுடைய கிட்டுனன் லோகநாதன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை...
பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (09) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த...
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, நாளை மறுதினம் புதன்கிழமை காலை ஆரம்பமாகும் பேரணி யாழ் நகரில் உள்ள வீதி வழியாக சென்று, இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக...
இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதை கருத்திற்கொண்டு, சாதாரண தரப்...
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை நாளை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. நேற்று காலை இந்தியா – நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட குறித்த கப்பல் பகல் 1.15 இக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே இந்த...
எதிர்காலத்தில் அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதன்படி அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் ஆட்சேர்ப்பு இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும் என்றும் மக்கள் தொகையில் சுமார் 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர்...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு 8.30 மணியளவில் வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றனர்....
Loading posts...
All posts loaded
No more posts
