- Monday
- December 22nd, 2025
நாட்டு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த தகவலை பளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இயக்கச்சியைச சேர்ந்த தங்கராசா தேவதாசன் (வயது-43) என்ற முன்னாள் போராளியே சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். கடந்த 3ஆம் திகதி மீன் ரின்னுக்குள் சி4 வெடிமருந்தைப்...
வெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். தொற்றுக்கு உள்ளான குறித்த கைதி...
யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் (பெரிய கோயில்) வைத்து கைது செய்யப்பட்டவர் மன்னார் வங்காலையைச் சேர்ந்த அலோசியஸ் ஸ்ரீபவன் வாஸ் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது மனநிலை தொடர்பில் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். “சந்தேக நபர் இன்று காலை சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அருட்தந்தை ஒருவரின்...
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு அண்மையாக உள்ள மரியன்னை தேவாலய (பெரிய கோயில் ) வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கை இன்று(திங்கட்கிழமை) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் தற்போது, தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் பேசாலை தேவாலயத்தில் நேற்றுமுன்தினம் நடமாடிய...
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை போல் தோளில் பை மற்றும் கையில் பையுடன் மன்னார் பேசாலையில் உள்ள தேவாலயம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. பேசாலை உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இனந்தெரியாத நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாட்டம் செய்துள்ளார். அவரது...
கொழும்பு – ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் என அடையாளங்காணப்பட்ட நபர் அந்த தொற்றுக்கு உள்ளாகவில்லை என பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பு 13 ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் பதிவான கொரோனா தொற்று நோயாளர்...
கடும் இராணுவப் பிரசன்னம், புலனாய்வாளர்களின் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள், பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கரும்புலிகள் தினமான நேற்றுக் காலை முதல் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இராணுவம், பொலிஸ் விசேட...
தமிழகத்திலிருந்து வேலணை பகுதியை சேர்ந்த ஒருவர் நெடுந்தீவு தெற்கு கடற்கரை வழியாக தீவுக்குள் நுழைந்த நிலையில், உடனடியாக செயற்பட்ட பாதுகாப்புதுறையினர் அவரை கைது செய்து தனிமைப்படுத்தியுள்ளனர். சிறிய தெப்பம் ஒன்றில் தமிழகத்திலிருந்து நெடுந்தீவுக்குள் நுழைந்த குறித்த நபர் வேலைணை 2ம் வட்டாரத்தை சேர்ந்த சுரேஸ்(வயது29) என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். 2004ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இருந்து...
கொழும்பு - 13 ஜிந்துபிட்டியில் கொரோனா வைரஸ்நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு இது சமூகபரவலில்லை என தெரிவித்துள்ளதுடன் அச்சம்கொள்ளத் தேவையில்லையென்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், கப்பலில் பணிபுரிந்த நிலையில் இந்தியாவில் இருந்து வருகைதந்த மாலுமி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொழும்பு , ஜந்துப்பிட்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது. இவர் கடந்த சில...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்தோடு யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். கடந்த...
காணாமல் போனவர்கள் நீண்ட காலம் ஆகியும் அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றாலோ அன்றேல் உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து இருக்கலாம் என்றே கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடிய போதே பிரதமர் மஹிந்த...
ஒரு தொற்று நோயாக மாறக்கூடிய புதிய வகைக் காய்ச்சல் சீனாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. “இந்தக் காய்ச்சல் சமீபத்தில் வெளிப்பட்டுள்ளது. பன்றிகளால் இந்த வைரஸ் பரவுகிறது. எனினும் ஆனால் மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞான ஆய்வு இதழான பிஎன்ஏஎஸ் வெளியிட்டுள்ளது. ஜி4 என்று...
வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு மேலதிகமாக இராணும் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு இவ்வாறு அரச உயர்மட்டத்தால் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் வாள்வெட்டு உள்ளிட்ட...
இலங்கையில், மேலும் 04 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை(29.06.2020 காலை - 8.15) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,037 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,661 ஆக அதிகரித்துள்ளது....
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்தது. மே மாதம் வரையில் முழு ஊரடங்கும் பின்னர் தளர்வுகளுடன் கட்டங்கட்டமாக ஊரடங்கு அமுலாக்கப்பட்டு வந்த...
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால், எந்தநேரத்திலும் எந்தநாட்டிலும் இரண்டாவது சுற்று ஆபத்து உருவாகலாமென இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, இலங்கையில் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் வைரஸினால் ஏற்படக்கூடிய ஆபத்தை அலட்சியம் செய்கின்றனர்....
பௌத்தத்தை ஊக்குவிக்கின்றோம், பாதுகாக்கின்றோம் பேணுகின்றோம் என்ற போர்வையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதே கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ செயலணி ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாணத்தையும் முடிந்தளவிற்கு வடமாகாணத்தையும் சிங்கள பகுதிகளாக மாற்றுவதும் இதன் நோக்கம் என அக்கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்....
ஆவா குழுவின் முக்கியஸ்தர் என காவல்துறையினரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளவரும் , தற்போது பிரான்சில் வசித்து வரும் சன்னா என்பவரின் பிறந்தநாளை கிளிநொச்சி பகுதியில் இளைஞர்கள் சிலர் கொண்டாடியுள்ள நிலையில் அவர்களில் 30 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி அக்காராயன் குளத்தை அண்டிய காட்டு பகுதி ஒன்றில் கடந்த 12ஆம் திகதி கூடிய சில இளைஞர்கள் “சன்னா”...
தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று (17.06.2020) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே குறித்த குற்றச்சாட்டில் கொடிகாமம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். குறித்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலை...
கிளிநொச்சி – பளையில் இராணுவத்தினருடையது என சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புலோப்பளை காற்றாலை அமைந்துள்ள பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணியினை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது, கேகாலை மாவட்டதைச் சேர்ந்த ஒருவரின் தேசிய அடையாள அட்டை, சாரதி...
Loading posts...
All posts loaded
No more posts
