- Monday
- December 22nd, 2025
யாழ் குடாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து சட்டவிரேதமாக வருவோர் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் , “இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது. எனவே,...
வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்களிடமிருந்து சமூகத்தில் கொவிட்-19 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா , கடந்த 24 மணித்தியாலங்களில் 53 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையை சாதாரணமாகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படவில்லை...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனை தற்காலிகமாக நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிய வருகிறது. எனினும், கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக இதனை அறிவிக்கவில்லை. மணிவண்ணனை தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக மத்தியகுழுவில் தீர்மானிக்கப்பட்டு, இரகசியமாக...
யாழ்ப்பாணத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரை மாய்த்தமைக்கு சமுர்த்தி அலுவலகத்தினதும், சமுர்த்தி உத்தியோகத்தரதும் செயற்பாடுமே காரணம் என குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறிப்பாக, அலுவலகத்தில் வைத்து பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அவரை அவமரியாதையாக திட்டியதாக குறிப்பிடப்படுகிறது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் இந்த சம்பவம் நடந்தது. கடந்த 20ஆம் திகதி, சிவயோகன் என்கிற குடும்பஸ்தர்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் இலங்கையிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று காலை 10.00 மணி முதல் இன்று காலை வரை நாட்டில் மேலும் 13 கொரோனா நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் உள்ளூராட்சி சபைகளுக்கு நியமனம் பெற்ற உறுப்பினர்களில் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுபவர்களை பதவி விலகுமாறு அந்தக் கட்சியால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. உள்ளூராட்சி சபைகளுக்கு விகிதாசார அடிப்படையில் கிடைக்கப்பெற்ற ஆசனங்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வருட காலமே பதவி வகிக்க முடியும் என்று நிபந்தனை...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறாத போதிலும் கொரோனா ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிவிட்டது என கருதி மக்கள் கொரோனா வைரஸ்...
மாதகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நில அளவைத் தினைக்களத்தினர் வருகை தந்த போது அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை நில அளவைத் திணைக்களத்தினர் கடற்படையினருக்கு அளப்பதற்கு நேற்று (வியாழக்கிழமை) வருகை தந்திருந்தனர்.இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நில...
நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போதைக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு முழுவதும் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அரசு அறிவித்தது. எனினும் தற்போது...
இந்தோனேசிய சுமத்ரா தீவிற்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளபோதிலும், இலங்கையில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது. 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் இந்த...
💥மணிவண்ணன் தொடர்ந்தும் உறுப்பினராக இருக்க முடியும் - கஜேந்திரகுமார் தெரிவிப்பு! 💥என்மீதான அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் என்மீதான மத்தியகுழு நடவடிக்கைகளுக்கு ஏற்புடையதல்ல பொதுச்சபையினை கூட்டினால் விளக்கமளிக்க தயார் - மணிவண்ணன் நெருங்கியவர்களிடம் தெரிவிப்பு மணிவண்ணன் பதவி நீக்கம் தொடர்பில் ஆதரவாளரிடயேயான உள்ளக கூட்டம் ஒன்றில் கயேந்திரகுமார் தெரிவித்ததாவது மணிவண்ணன் தொடர்பில் நாங்கள் 3 மணி நேரம் விவாதித்தோம்....
செஞ்சோலை படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த...
பொதுமக்கள், அரசியல்வாதிகளை வழிநடத்தும் ஒரு பொறிமுறை நோக்கி நகர முயற்சி எடுக்க தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக பேரவை விடுத்துள்ள அறிவிப்பில், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலே மக்கள் தமது தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். அந்த மக்கள் தீர்ப்பு மதிக்கப்படவேண்டிய ஒன்றாகும். இந்தத் தேர்தலில் எந்தவொரு அணியினருக்கும்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கோகுலராஜ் என்பவரின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்...
யாழ்.நீர்வேலியில் வெள்ளை வாகனத்தில் வந்த கும்பல் வீட்டிலிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு 20 வயதான இளம் பெண்ணை கடத்தி சென்றதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெள்ளை வாகனத்தில் சென்ற நான்கு...
யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கு குழப்பம் காரணமாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் ரவிராஜின் சிலைக்கு கறுப்பு,சிவப்பு துணிகள் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த துணிகளும் அகற்றப்பட்டுள்ளன....
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக தனது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது...
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் இன்று மாலை 5 மணிவரையான நிலவரப்படி ராஜபகசக்களின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 73 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது. வடக்கு – கிழக்கில் யாழ்ப்பாணம், திகாமடுல்ல மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல்...
எம்.ஏ.சுமந்திரனின் பல கருத்துக்கள், அறிக்கைகள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துவதாகவே உள்ளன எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இதனை மக்கள் புரிந்து கொண்டு செய்ய வேண்டியதனை செய்வார்கள் என்றுதான் நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=HncUNQ60H5E&feature=youtu.be சமீபத்தில் இலங்கை ஊடகவியலர்களிடையே இணையவழி செயலிமூலம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும்...
Loading posts...
All posts loaded
No more posts
