- Tuesday
- November 25th, 2025
அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களது விடுதலையை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது...
அனைத்து மருந்துப் பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலை இன்று முதல் அமுலாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.இதன் ஊடாக பல மருந்துப் பொருட்களின் விலைகளும் குறைவடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறு மருந்துப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை அமுலாக்கப்படவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேநேரம் எதிர்காலத்தில் குருதி பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்வதற்கான...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த தகைமை உடையவர்கள் என கருதப்படும் 23 கைதிகளின் பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 96 சந்தேகநபர்களில் 23 பேருக்கு இவ்வாறு புனர்வாழ்வு பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு...
கொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், எதிர்வரும் 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாயவுக்கு மாற்றப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, நாளை வெள்ளிக்கிழமை (13) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை, இத்திணைக்களத்தில் எந்தவொரு சேவையும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாய புதிய கட்டடத்தொகுதியில் வழமையான சேவைகள் இடம்பெறவுள்ளன.
அதிபர் சேவையின் முரண்பாடுகளின் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நேற்று 21.09.2016 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய சுமார் 500 வரையான அதிபர்கள் ஜனாதிபதி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதன்போது பொலிஸார் லோட்டஸ் வீதியில் வைத்து ஊர்வலத்தை வழிமறித்தனர். இதன்போது ஏற்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து – தொழிற்சங்க...
தமது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென கோரியுள்ள இவர்கள், தாம் தொடர்புடைய வழக்குகளை தமிழ் பிரதேசங்களுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தமது விடுதலையை...
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல பொலிஸாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
'இஸ்லாம் மதத்தினைத் தமது அரசியல் தேவைகளுக்காக முஸ்லிம்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன், அதற்காக முஸ்லிம்களிடம் பகிரங்கமாகவே மன்னிப்புக் கேட்கவேண்டும்' என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில், நேற்றுப் புதன்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள்,...
இம்மாதம் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும். நுளம்புகள் உருவாகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். நுளம்பு ஒழிப்பு வாரத்தில் வீடுகள், நிறுவனங்கள் என்பனவற்றின் சுற்றுச்...
2019ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த சந்திப்பு அலரிமாளிகைளில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 17 வருடங்களுக்குப் பிறகு...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள 23 பேரின் தண்டனையை தளர்த்துவது தொடர்பில் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலின் படி புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கமைய 23 கைதிகளையும் 6 மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின்...
ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளுக்கான தீர்வை வரியை முற்றாக நீக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழினுட்ப அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மேற்படி திட்டத்தை உள்ளடக்குவதற்கு நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அரச வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றபோதிலும், தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் தமக்கேற்றாற்போல் விலைகளைத் தீர்மானித்து மருந்துகளை விற்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்திக்கின்றனர்....
வடக்கு மக்களின் காணிகளை அவர்களுக்கு விரைவாக வழங்கி மீள்குடியேற்ற வேண்டுமென தென்பகுதி மக்கள் ஜனாதிபதிக்கு எதிர்வரும் வியாழக்கிழமை மகஜரொன்றை அனுப்பவுள்ளனர். நல்லிணக்கத்தை மேம்படுத்துவது தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் கருவலஸ்வெல மற்றும் இடங்களை சேர்ந்த தென்பகுதி மக்களை கடந்த 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். அம்மக்கள் வலி.வடக்கில் இருந்து...
சீகா வைரஸ் காய்ச்சல், இதுவரை இலங்கையில் எவருக்கும் தொற்றவில்லை என்று தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பீ.ஜி.மஹிபால ஹேரத், சிலாபம் - நல்லரசன்கட்டு பகுதியில் உயிரிழந்த இரு மூதாட்டிகளும், ஒருவகை வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளனர் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார். சுகாதாரக் கல்விப் பணிமனையில், நேற்றுத் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர்...
கடவத்தை - ரன்முத்துகல பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அணி வீரர் நுவன் குலசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரது வாகனம் மோதியதில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையை அடுத்து அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு – பாசிக்குடா கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ள நிலையில், சோகம் தாளாத பெற்றோர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நாம் பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோது, சண்முகம் சுரேஸ்குமார் (வயது 22) மற்றும் சண்முகம் சதீஸ்குமார் (வயது – 18) ஆகிய இளைஞர்கள் பாசிக்குடா...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றடைந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி எதிரவரும் 21ம் திகதி அங்கு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று ஆரம்பமாகும் ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரையாற்றுவதற்கு நாளை மறுதினம் நேரம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த...
ஸீகா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் குறித்து ஸ்ரீலங்காவில் சிவப்பு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய பகுதிகளில் இந்த நோய்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிக்குன்குனியா இந்திய தலைநகர் புதுடில்லியில் வேகமாக பரவிவருவதுடன், ஸீகா வைரஸ் சிங்கப்பூரில் அதிகமாக பரவி வருவதாகவும் தற்போது தாய்லாந்திலும் அதன்...
பூமிக்கு அருகாமையில் ஆபத்து ஒன்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பூமிக்கு அருகில் இன்று பயணிக்கும் பாரிய விண்கல் ஏதாவதொரு சமயத்தில் பூமி மீது மோதுண்டால், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 200 அடி நீளம் கொண்டதென கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறான வாய்ப்புகள் மிகவும் குறைவு என துறைசார்...
Loading posts...
All posts loaded
No more posts
