- Wednesday
- July 9th, 2025

ஒரு மருத்துவராக இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யாது பகிரங்கமாக மருத்துவர் போன்று செயற்படும் சைட்டம் மருத்துவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை மருத்துவ அதிகாரிகளின் சங்கம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. தெற்காசியாவின் தொழினுட்ப மற்றும் மருத்துவ நிறுவனத்தின் (SAITM) தலைமை நிறைவேற்று அதிகாரியாக செயற்படும் அதன் மருத்துவ பீடத்தின் பணிப்பாளர்...

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தென் மாகாணத்தில் இன்று நான்கு மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், நேற்று ஊவா மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரிசி பதுக்கி வைத்தல், அரசின் கட்டுப்பட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்தல் மற்றும் இரசாயன கலவை அடங்கிய அரிசி விற்பனை செய்தல் போன்ற மேசடிகள் தொடர்பில் 1977 எனும் இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யுமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். குறித்த இலக்கம் காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குமென அவர்...

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் நாடுதழுவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக இன்றைய தினம் ஊவா மாகாணத்தில் எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என...

நாட்டில் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல இடங்களிலும் மழை பொழியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மழை மற்றும் இடியுடன் கூடிய மழை சப்ரகமுவ , மேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில்...

ஏப்ரல் 21ஆம் திகதிவரை மழை பெய்யாவிட்டால் நீர் மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என, மின்சக்தி மற்றும் புதுபிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சன் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன், மே மாத இறுதியாகும்போது, கடும் வரட்சி நிலை ஏற்பட்டால் குடி நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக 38 வகையான கண் வில்லைகளின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். கண் வில்லைகளின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதனால் கண் சத்திர சிகிச்சைக்கான விலைகளும் பெருமளவில் குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

பம்பலபிட்டி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் மாணவி, அப் பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்கு செல்லும் மேம் பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.இச் செய்தியை பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த தகவல்கள் பின்வருமாறு...15 வயதான மாணவியொருவரே நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் இவ்வாறு கீழே குதித்துள்ளார்.இதில் படுகாயங்களுக்கு உள்ளான அவர் களுபோவில போதனா மருத்துவனையில் சிகிச்சை பெற்று...

கொழும்பின் பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ள மோதல் சம்பவங்கள் காரணமாக ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனந்த மற்றும் நாலந்தா கல்லூரி மாணவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவம் காரணமாக சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்திலும் சில மாணவர்கள்...

தமிழர்கள் 11 பேரைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த 10 அதிகாரிகளை அடுத்த வாரத்துக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையில் 5 பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற வலுவான சான்றுகள் உள்ள 11...

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களிலிருந்து விண்ணப்பங்களை கோராமல் விட நாம் தீர்மானித்துள்ளோம். எனினும், யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்-பௌத்தரினால் வேட்பாளருக்கான விண்ணப்பம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என, ஜாதிக ஹெல உறுமயவின் உள்ளூராட்சி குழுவின் தலைவர் வண்.புதுகல ஜினவங்ச தேரர் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, ஐக்கிய தேசிய முன்னணியின்...

சய்டம் நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு தான் பெற்ற கடன் மற்றும் நிறுவனத்தின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம்பளம் வழங்குவதற்கான செலவுகள் உட்பட அனைத்தையும் வழங்க முடியுமானால் நிறுவனத்தின் உரிமையை முழுமையாக கையகப்படுத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வதாக சய்டம் நிறுவனத்தின் நிறுவுனர் வைத்தியர் நெவில் பெர்ணாந்தோ கூறியுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட...

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். சமூக வலைத்தளங்களை பொதுமக்கள் பயன்படுத்துவது...

நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படவுள்ள 15 வீத விஷேட வட்டிக்கான அதிகபட்ச நிலையான வைப்பு தொகை 10 இலட்சத்திலிருந்து 15 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2017 வரவு செலவு திட்டத்தில் முன் வைக்கப்பட்ட குறித்த யோசனை மார்ச் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட...

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேசத்தில் மக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலமீட்பு போராட்டக் கோரிக்கைக்கு விரைவில் அரசாங்கம் தீர்வைப்பெற்றுக் கொடுக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார். கடந்த காலங்களில் காணிகள் விடுவிக்கப்படாத போதிலும் போராட்டங்கள் இடம்பெறவில்லை. ஆனால் இன்று காணிகள் இயன்றளவில் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் போராட்டங்கள் வெளிக்கிளம்ப ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கும், அதன் வைத்தியர்கள் சிலருக்கும் எதிரான 100 மில்லியன் ரூபா அபராதம் கேட்டு களனிப் பிரதேச இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (14) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தனது இரண்டாவது பிள்ளையின் பிரசவத்தின் பின்னர் தனது வயிற்றில் பஞ்சுப் பொதியொன்றை தவறுதலாக வைத்து தையல் போட்டுள்ளதாக...

நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை மாணவர்களை சேர்ப்பது நிறுத்தமுடியாது என்று மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைவரான மருத்துவர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தீர்வு கிடைக்கும்வரை 6 மாதங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்தும்படி உயர்கல்வி அமைச்சு விடுத்த வேண்டுகோளை மருத்துவர் நெவில் பெர்ணான்டோ நிராகரித்துள்ளார். சிறந்த மருத்துவக் கற்கைகளுக்காக தமது பல்கலைக்கழகத்தில் அதிகூடிய சம்பளத்திற்கு விரிவுரையாளர்கள்...

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று எதிரணியிலுள்ள சில தரப்பினர் மற்றும் பேரினவாத அமைப்புக்களும் வலியுறுத்திவரும் நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக பிரசாரம் ஒன்றை முன்னெடுப்பது...

இலங்கை அரசியல்வாதியொருவர் காதலர் தினத்தை முன்னிட்டு 53கிலோ ரோஜாமலர்கள் 2000 ஏனைய மலர்களைக் கொள்வனவு செய்ததையடுத்து, இம்மலர்கள் அனைத்தும் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து எரித்து அழிக்கப்பட்டுள்ளன. காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் இம்மலர்கள் பொதிகளில் அடைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமையன்று கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்தன. இவற்றை அரசியல்வாதியொருவரே கொள்வனவு செய்துள்ளார் என விமானநிலைய அதிகாரிகள் சந்தேகம்...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய கீலோங்கில் உள்ள டேய்கின பல்கலைக்கழகம் இன்று கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் நேற்றிரவு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரை சென்றடைந்தார். வன்முறை, முரண்பாடுகளில் இருந்து நிலையான ஜனநாயகத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்லும், பிரதமரின் முயற்சிகளை கௌரவிக்கும் வகையிலேயே கௌரவ...

All posts loaded
No more posts