- Wednesday
- November 26th, 2025
நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை மீறி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியது. இலவசக் கல்வியை விற்பனை செய்ய வேண்டாம் என்றும், தேசிய உயர் கணக்கீட்டு டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில்...
மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களை கொலை செய்ய திட்டமிடுகிறீர்களா கடந்த காலங்களில் உங்கள் ஆட்சியில் கண்ட "இரத்த வெள்ளம்" போதாதா? என்று நாடாளுமன்றத்தில் மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளானது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கூச்சல் குழப்பம் ஏற்பட்டது....
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 216 விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார். எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கைதிகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிக்கு அமைய, இந்த அறிக்கை சிறைச்சாலை திணைக்களத்தினால் சட்ட மா அதிபர்...
பொலிஸாரின் தாக்குதலுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த வாரம் தேசிய உயர் கணக்கீட்டு டிப்ளோமா மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் பலர் பொலிஸாரினால் தடியடி மூலம் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு...
இந்திய சினிமாவில் தன் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் சன்னி லியோன். இவர் நடிக்கும் படங்களை இந்தியாவில் அனுமதிக்க கூடாது என்ற அளவிற்கு போராட்டம் நடந்து வருகின்றது.இந்நிலையில் இவர் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளாராம். எதற்கு என்று விசாரிக்கையில் இலங்கையில் உள்ள பிரபல கெசினோ சூதாட்ட நிலையம் ஒன்றின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக...
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மை பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இல்லையேல் உயிர் துறப்போம் என தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர். தமது விடுதலை தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்கமான பதிலை ஜனாதிபதி எமக்கு வழங்கவேண்டும். இல்லையெனில் மீண்டும் நாம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு சாவைத் தழுவுவோம். இதுதான் எமக்கு இறுதியாக...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு உயர்நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் மோசடி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தனியார் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த குறித்த மனுவில்,...
ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட நிலத்தடி மாளிகை, கொழும்பு துறைமுகத்துடன் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்துடன் இந்த நிலத்தடி இல்லத்தை தொடர்புப்படுத்தும் பணிகள் அரைவாசி வரை முடிவுற்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றிய ஒருவரின் தகவல்படி குறித்த நிலத்தடி மாளிகைக்கு இரண்டு தடவைகள்...
தடுப்புக்காவலில் உள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் நியாயமான வகையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புலிகளுடன் தொடர்பில்லாத தமிழ் கைதிகள் விடுவிக்கப்படுவர். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என்று சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் யாரையும் தடுத்து வைக்கவில்லை. ஆனால்...
மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் பௌத்த நாடு என்ற பெயரில் சிறுபான்மை இன மக்களான தமிழ், முஸ்லிம்களை இலக்குவைத்து திட்டமிட்ட இனஅழிப்பும், அடக்குமுறையும் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு கொழும்பில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில்...
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தடியடி தாக்குதல் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணை அறிக்கை ஒன்றை கோரியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு சட்ட ஒழுங்கு மற்றும் சிறசை்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு பணிப்புரை விடுத்துள்ள பிரதமர், விசாரணை அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் இனங்ககோனுக்கு பணித்துள்ளார்....
பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்து செல்கின்றமை தனக்கு உளத் துன்புறுத்தலாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவுக்கு வெளியில் வைத்து ஊடகவியலாளர்களிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
தனக்குக் கற்பித்த ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று, அவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு கொலை செய்ததாகக் கூறப்படும், அவரது மாணவனைக் குற்றவாளியாக இனங்கண்ட மாத்தறை மேல் நீதிமன்றம், அவரதுக்கு நேற்று வியாழக்கிழமை மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. மாத்தறையில் உள்ள அவரது வீட்டில் கொள்ளையடிப்பதற்காகச் சென்றிருந்தபோதே, அவர், ஆசிரியையைப் படுகொலை செய்திருந்தார். 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தில் மாத்தறை...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால், HNDE மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து, 39 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 5 பெண்களுடம் 2 பிக்குமாரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மாளிகை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அமைக்கப்பட்ட பதுங்கு குழி என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான நிலக்கீழ் மாளிகை ஒன்று அலரி மாளிகையினுள் உள்ளதாக அபயராமையில் வைத்து அவர் குறிப்பிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ச கூறும் வகையில் மேலும் ஒரு நிலக்கீழ் பதுங்கு குழி...
ஜனாதிபதி மாளிகையில் நிலத்தின் கீழ் பதுங்குக் குழி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வௌியாகியுள்ள கதைகளால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர குறிப்பிட்டுள்ளார். இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்கான குறித்த பதுங்குக் குழி...
காணாமல்போக செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் 25ஆவது வருட நிறைவு தின நிகழ்வு செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. காணாமல்போக செய்யப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்த நிகழ்வில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இருந்து காணாமல்போக செய்யப்பட்டோரின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள், நாட்டில் இரகசிய முகாம்கள் உள்ளன என திடமாகத் தெரிவித்ததுடன்,...
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அநியாயம் இழைக்கப்பட்ட சிறுவர்களுக்காக, கல்வி அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் தொகையை குறைத்தமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அந்த சட்ட நடவடிக்கைக்கும் மேலாக போராட்டத்தினை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக, குறித்த சங்கத்தின்...
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டு மீண்டும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவரது கடவுச்சீட்டு இன்று மீள வழங்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த வௌ்ளிக் கிழமை கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாள பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். இம்மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி பிரதேசங்களான புதிய காத்ததன்குடி, ஏத்துக்கால், பாலமுனை, நாவலடி உட்பட பல இடங்களிலுள்ள கடலில் பாரியளவிலான கொந்தளிப்பு காணப்படுகின்றது. மேலும், இம்மாவட்டத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
