- Wednesday
- October 14th, 2026
சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு இரு வேடங்கள் என தகவல் வெளியாகி உள்ளது. வீரம் படம் அஜீத்தின் நகர்ப்புற படங்களிலிருந்து வித்தியாசமாக அமைந்தது. அஜீத்தால் இனி கிராமத்து கதையில் நடிக்க முடியுமா? அப்படியே நடித்தாலும் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்விகளுக்கு வீரம் நேர்மறையான பதிலாக அமைந்தது. அந்த மகிழ்ச்சியில், அப்போதே மீண்டும்...
இந்திய சினிமாவையே புரட்டி போட்ட படம் எந்திரன். 2010ல் வெளியான இப்படத்தின் வசூல் இந்தியளவில் தற்போதும் டாப் 10ல் தான் இருக்கிறது. ரஜினி-ஐஸ்வர்யா என உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிரமாக உள்ளார். இதிலும் ரஜினியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா...
தமிழ் சினிமாவில் நடித்த சில படங்களிலேயே உச்சத்தை தொட்டவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் விரைவில் காக்கிசட்டை படம் வரவிருக்கிறது. இதற்காக தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்த இவரிடம், நீங்கள் சம்பள விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கிறீர்கள் என்று ஒரு தகவல் வெளியாகிறதே? என்று கேட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் ” ‘காக்கிச்சட்டை’ படத்துக்கு என்ன சம்பளம் என்றே...
இளைய தளபதி விஜய் வளரும் கலைஞர்களுக்கு என்று மரியாதை கொடுப்பவர். அந்த வகையில் சில விருது விழாக்களில் தனக்கு பிடித்திருந்தால், உடனே மேடையிலேயே பாராட்டி விடுவார். இந்நிலையில் கடந்த வருடம் வெளிவந்த கத்தி திரைப்படம் தெலுங்கில் அடுத்த வாரம் ரிலிஸாகவுள்ளது. அதேபோல் அனேகன் படமும் இதே நாளில் தான் ரிலிஸ் செய்யவிருக்கின்றனர். ஆனால், ஒரே நேரத்தில்...
உத்தமவில்லன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பழம்பெரும் வில்லன் நடிகர்களுக்கு மரியாதை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில் உத்தமவில்லன் படத்தின் ஆடியோ வெளியீட்டு...
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்து முன்னணி நடிகையாகி விட்டார் நயன்தாரா. இவர் தற்போது மாஸ், மாயா, நண்பேண்டா, இது நம்ம ஆளு என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.இப்படங்கள் முடிந்த கையோடு, அடுத்து விக்ரமிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். விக்ரம் தற்போது 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு...
கத்தி’ படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகிறார்கள். ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் 3...
ஜிகிர்தண்டாவுக்குப் பிறகு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படத்தை அவரது முதல் படம் பீட்சாவை தயாரித்த திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமாரே தயாரிக்கிறார். இறைவி என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஒரு நடிகர் இவர்களுடன் இணைந்துகொள்ளவிருக்கிறார். அவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை....
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். திரிஷா, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்போது இந்த கூட்டணியில் காமெடி நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். இதை ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்திற்கு பிறகு ‘அப்பாடக்கர்’...
பழம்பெரும் நடிகை மனோரமா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால், அது வெறும் வதந்தி என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி' என அன்போடு அழைக்கப்படும் நடிகை மனோரமா, இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த...
உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் காதலர் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பலவிதமான காதலர் தின கொண்டாட்டங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் மலையால நடிகர் மோகன்லால் சற்று வித்தியாசமாக காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். அவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று, அங்கு உள்ளவர்களுடன் நேரம் செலவழித்து கொண்டாடியுள்ளார். அதுபற்றி அவர் முகநூல்...
நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து பணம் சம்பாதிப்பதோடு மட்டும் இல்லாமல், தங்கள் மனதுக்குப் பிடித்த நல்ல காரியங்களுக்கு செலவு செய்து தங்கள் ஈடுபாட்டை தெரிவித்து வருகிறார்கள். அப்படி பல நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். கஷ்டப்பட்டு வரும் ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை விஜய் செய்து வருகிறார். தற்போது சென்னையில்...
என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது என்று மீண்டும் கூறியுள்ளார் கௌதம். தோல்விகளால் துரத்தப்பட்டு தமிழ் சினிமாவின் விளிம்புக்கு சென்ற கௌதமை மீண்டும் மையத்தில் உட்கார வைத்துள்ளது, என்னை அறிந்தால். தன்னுடைய ஸ்கிரிப்டோ இயக்கமோ இதற்கு காரணமல்ல, அஜீத் என்ற நடிகரின் ஸ்டார் பவரே காரணம் என்பது அவருக்கும் நன்றாகவே தெரிந்துள்ளது....
ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் ஏற்கெனவே ரெஹனா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசையமைப்பாளர்களாக உருவெடுத்துள்ளனர். தற்போது இவரது குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு இசைக்கலைஞன் உருவாகியுள்ளார். ரகுமானின் தங்கை மகனான இ.ஆர்.அசார் காஷிஃப் ‘கண்ணாலே’ என்ற மியூசிக் வீடியோ மூலம் இசையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறார். இளமை பொங்கும் இந்த காதல் பாடலை காஷிஃப் இசையமைக்க,...
டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் 17–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மகால் உள்ளது. இதை நாட்டின் நினைவுச்சின்னமாக மத்திய அரசின் தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் தாஜ் மகாலின் அருகே 500 மீட்டர் தூரத்தில் உள்ள அரங்கில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு...
தமிழ் சினிமாவில் தொட்டதெல்லாம் வெற்றியாக இன்று உச்சத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் படம் காக்கிசட்டை. ஆனால், தற்போது இவர் அடுத்து நடிக்கும் படமான ரஜினிமுருகன் படத்திற்கும் தற்போதே வியாபாரம் தொடங்கி விட்டது. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இதன் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளதாக...
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மட்டுமின்றி அதில் கருத்துக்களையும் கூறி அனைவரையும் கவர்ந்தவர் விவேக். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்து, திரையில் வெற்றி நடைப்போடும் படம் என்னை அறிந்தால். இப்படத்தில் காமெடி குறைவு என்றாலும் இவர் வரும் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இது குறித்து இவர் கூறுகையில் ‘இன்று சினிமாவை தியேட்டரில் வந்து பார்ப்பவர்கள் என்றால்...
கார்த்தி - சுராஜ் இணையும் புதிய படத்துக்காக திருப்பதி போய் மொட்டை போட்டுத் திரும்பியுள்ளார் நடிகர் விவேக். அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்' படத்தில் விவேக் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். வழக்கமாக ஹீரோ போலீஸ் அதிகாரி என்றால், காமெடியனை கான்ஸ்டபிளாக்கி காமெடி செய்ய வைப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஹீரோ அஜீத்த்துக்கு இணையான...
இளைய தளபதி முதன் முறையாக சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் படம் புலி. இப்படம் அரசர் காலத்து கதை என்பதால், தமிழ் உச்சரிப்பு மிக சுத்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் எண்ணியுள்ளார். இதனால், ஸ்ருதி, ஸ்ரீதேவி, ஹன்சிகா ஆகியோர் மிகுந்த பயிற்சி எடுத்து வருகின்றனர். மேலும், விஜய்யும் முதன் முறையாக சுத்தமான தமிழில் பேசவிருக்கிறாராம்....
57 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், இந்தியாவை சேர்ந்த இருவர் இசையுலகின் கவுரவம் மிக்க இவ்விருதினை பெற்றனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசையுலகின் உயரிய விருதான கிராமி விருது வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரையுலகம் மற்றும் பாப் இசை உலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் இவ்விழாவில் பங்கேற்றனர். இவ்விருதுக்கான...
Loading posts...
All posts loaded
No more posts
