- Thursday
- October 15th, 2026
விஜய்-அட்லி கூட்டணியில் வெளிவந்த ‘தெறி’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து, மீண்டும் அந்த கூட்டணி இணையப்போவதாக செய்திகள் வெளிவந்தது. அதனால், அட்லி அடுத்தாக விஜய் நடிக்கும் படத்தைத்தான் இயக்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது அட்லி அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அட்லியை தனது இல்லத்திற்கு...
ஜோதிகா, திருமணமாகி 8 வருட இடைவெளிக்கு பிறகு நடித்த ‘36 வயதினிலே’ படம் கடந்த வருடம் வெளியாகி வசூல் குவித்தது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டுஆர்யூ’ என்ற படத்தின் தமிழ் பதிப்பாக இதனை தயாரித்து வெளியிட்டனர். அதன் பிறகு புதிய படத்தில் நடிக்க ஜோதிகா கதை கேட்டு வந்தார். ‘குற்றம்...
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இருமுகன்’. இதில் விக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் தெலுங்கு டைட்டில் மற்றும் டீசரை ஆந்திராவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி வெளியிட்டார். விக்ரம், நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேரும் இப்படத்திற்கு தெலுங்கில் “இன்கோகடு” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற, தமிழ், மலையாளம், தெலுங்கு...
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ராவ் ஹிதாரி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பு ஊட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடம் ஏற்கிறார். வழக்கம் போல படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் வைரமுத்து. இப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது. கார்த்தியின் பார்வை...
அமெரிக்கா செல்வதற்கு முன், கபாலி படத்தை முழுமையாக பார்த்த ரஜினி, அவருக்கே உரிய பாணியில், படம் ச்சும்மா அப்படியே பிரமாதமா வந்திருக்கு என, கைகளை அகல விரித்து சொல்லி சந்தோஷப்பட்டார் என்று, கபாலி பட தயாரிப்பாளர் எஸ்.தாணு பேட்டியளித்தார். கபாலி படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பட வெளியீடு போன்ற பரபரப்பான சூழ்நிலையில்...
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள அவர்களது 100வது படத்தை சுந்தர் .சி இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கப் போகிறார் என கடந்த பத்து நாட்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஏற்கெனவே, இந்தப் படத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வந்து, அதன் பின் சூர்யா தரப்பிலிருந்து...
திரைப்பட பின்னணி பாடகர், கே.ஜே.ஜேசுதாஸ், இந்து மதத்துக்கு மாறியதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, ‘டுவிட்டர்’ சமூக தளத்தில் வெளியிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ், தமிழ் உட்பட, 14 இந்திய மொழிகளில், 45 ஆயிரம் திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். ஏழு முறை தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண்...
நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டுவதாக நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் வாக்குறுதி அளித்து பொறுப்புக்கு வந்தனர். அந்த இடத்தில் 5 மாடி கட்டிடம் கட்டப்படும் என்றும், அதில் 1,000 பேர் அமரும் அரங்கம், கல்யாண மண்டபம், பிரிவியூ...
‘வேதாளம்’ படத்திற்கு பிறகு அஜித், தன்னுடைய காலில் ஏற்பட்ட வலியால் அதற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். டாக்டர்கள் அவரை 3 மாத காலம் ஓய்வெடுக்கச் சொல்லி வலியுறுத்தியதால் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். இதற்கிடையில், தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை மறுபடியும் ‘சிறுத்தை’ சிவாவுக்கே வழங்கியிருந்தார். அஜித் ஓய்வில்...
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா...’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் டீசரும் இணையதளத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில், கபாலி படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ என்ற பாடல் தலைப்பை தற்போது விக்ரம் பிரபு கைப்பற்றியுள்ளார். இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘நெருப்புடா’ என்று தலைப்பு...
சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான்கராத்தே போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் அனிருத். இந்த படங்களில் அனிருத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதால் தற்போது தனது பிரமாண்ட படமான ரெமோவிலும் அவரையே இசையமைக்க வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். வேதாளம் படத்திற்கு பிறகு தனது மார்க்கெட் மந்தமாகியிருப்பதால் இந்த படத்தின் சூப்பர் ஹிட் பாடல் களை கொடுத்து மீண்டும் பரபரப்பான இசையமைப்பாளராகிவிட வேண்டும்...
மன உறுதி இருந்தால் புற்றுநோயை எளிதில் வெல்ல முடியும் என்பதற்கு நானே சாட்சி என நடிகை கெளதமி தெரிவித்துள்ளார். பிரபல நடிகை கௌதமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அதிலிருந்து மீண்ட கௌதமி, மற்ற புற்றுநோயாளிகளுக்கு உதவுவதற்காக லைஃப் அகைன் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி...
இன்றைய குழந்தை நட்சத்திரங்கள் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பது உண்மை ! கமல், ஸ்ரீதேவி, விஜய், சிம்பு, ஷாலினி, ஷாம்லி இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் மோனிகா சிவாவும் வருங்காலப் பட்டியலில் இடம் பிடிப்பாள். சென்னையில் படிக்கும் அந்த ஆறு வயசு குழந்தையின் கைகளில் பத்து விரல்களை மிஞ்சிய படங்கள். இளைய தளபதி...
சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியின் சினிமா கேரியர் பரபரப்பாகி விட்டது. அதனால் அவர் சின்ன பட்ஜெட்டில் நடித்து வந்த சைத்தான் படமும் இப்போது பிரமாண்டப்படுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் நடித்து வரும் எமன் இன்னும் பெரிய மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதோடு, இந்த படத்தில் முன்னணி ஹீரோக்களைப்...
சிவகார்த்திகேயனுக்குப்பிறகு விஜய் டிவியில் இருந்து சினிமாவில் ஹீரோவானவர் மா.கா.பா.ஆனந்த். வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார். படமும் ஓரளவு ஓடியதால் அதையடுத்து கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் ஒப்பந்தமானார் மா.கா.பா., ஆனால் பின்னர் அவர் நடிப்பில் வெளியான நவரச திலகம் படம் வெற்றி பெறவில்லை. விளைவு, அவரது நடிப்பில் வேகமாக வளர்ந்து வந்த...
டெல்லி -6 திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக வெவ்வேறு நகரங்களில் மக்களின் முன் தோன்றி சாதனை படைத்துள்ளார் பொலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன். 2009ஆம் ஆண்டில், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் “டெல்லி – 6′ படத்தில் அபிஷேக் பச்சனுடன் சோனம் நடித்தார். அவருக்கும் இந்தப் படம் நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. டெல்லி –...
சோஷியல் மீடியா வந்த பிறகு அக்கப்போர்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சினிமாவுக்கு சம்மந்தமே இல்லாத ஆட்கள் இல்லாம் கையில் ஒரு மொபைலை வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் அலைய ஆரம்பித்துவிட்டனர். இப்படிப்பட்ட ஆட்களால் திரையுலகில் அநியாயத்துக்கு குழப்பம். ஒரு ஸ்டில் வெளிவந்தால் போதும், அதில் உள்ள நடிகரின் கெட்அப்பைப் பார்த்துவிட்டு அவர் இந்த கேரக்டரில் தான் நடிக்கிறார்...
திட்டமிட்டபடி கபாலி வருகிற 15ந் தேதி ரிலீசாக வேண்டும். ஆனால் படத்தை மலாய் மொழியில் டப் செய்யும்போது ரஜினி வாய்சை அந்த ஸ்டைல் மாறாமல் மலாய் மொழியில் பேச சரியான ஆள் கிடைக்காமல் அது தள்ளிப்போனது. அதனால் திட்டமிட்டபடி படம் வெளிவருதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது புதிய ஷெட்யூல்படி ரஜினி அமெரிக்காவில் இருந்து நாளை (3-ம்...
கவுதம் மேனன் அடுத்ததாக 4 ஹீரோக்கள் நடிக்கும் படத்தை தொடங்கப் போவதாக கூறப்படுகிறது. 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்குப் பின் தனுஷ்-மேகா ஆகாஷை வைத்து 'என்னை நோக்கி பாயும் தோட்டா'வை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில் கவுதம் மேனன் அடுத்ததாக பிருத்விராஜ்(மலையாளம்), சாய் தரண்தேஜ்(தெலுங்கு), புனித்...
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மதவிவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதன் பின்னர்...
Loading posts...
All posts loaded
No more posts
