ஹாலிவுட் ஸ்டுடியோவில் அஜித் படப்பிடிப்பு ஆரம்பம்!

சிவா இயக்கத்தில் நடித்து நடிக்கும் 57வது படம் கேங்ஸ்டர் கதையில் உருவாகிறது. இந்த படத்தில் அஜித்துடன் காஜல்அகர்வால், அக்சராஹாசன், சதீஷ் உள்பட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பல்கேரியா நாட்டில் தொடங்குகிறது. அதையடுத்து ஐரோப்பாவிலும் படப்பிடிப்பு நடக்கிறதாம். மேலும், தொடர்ந்து 40...

பிறந்தநாளில் தனுசுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஜினி

நடிகர் தனுஷ் நேற்று (ஜூலை 28) தனது பிறந்த நாளை கொண்டாடினார். தனது வீட்டில், வடசென்னை பட குழுவினருடனும், தனது குடும்பத்தினருடனும் தனுஷ் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், நேரில் வந்து தனுசிற்கு வாழ்த்து கூறி, ஆசீர்வதித்தார். சுமார் 3 மணி நேரம்...
Ad Widget

‘கபாலி’யில் ரஜினியை வேறுவிதமாகப் பார்த்ததில் மகிழ்ச்சி : சோ ராமசாமி

ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'கபாலி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. எனினும் வசூலில் இப்படம் குறை வைக்கவில்லை. இதனால் மகிழ்ந்து போன ரஜினி இப்படத்தின் வெற்றி குறித்த தனது மகிழ்ச்சியை கடிதமாக எழுதி வெளிப்படுத்தியிருந்தார். ‘கபாலி’ படத்தின் சிறப்பு...

கமலுக்காக ‘கபாலி’ சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யும் ரஜினி?

ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'கபாலி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. எனினும் ரஜினி ஹீரோயிசம் காட்டாமல் இப்படத்தில் நடித்திருக்கிறார் என்ற பாராட்டுகளுக்கும் குறைவில்லை. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் 'கபாலி'க்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், தனது நெருக்கமான நண்பர்களின் விமர்சனத்தை ரஜினி மிகவும் எதிர்பார்க்கிறாராம். இதனால் நேற்று தனது நண்பரும்,...

கபாலி சரித்திர வெற்றி…ரஜினியின் முழு அறிக்கை இதோ!

கபாலி படத்தின் மிகப் பெரிய வெற்றியைப் பார்த்து உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன். இதற்காக தயாரிப்பாளர் தாணு மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த இரு மாதங்களாக அமெரிக்காவில் ஓய்வெடுத்த ரஜினிகாந்த், கபாலி படம் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற பிறகு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். தனது அமெரிக்கப்...

என் மகன் இருந்திருந்தால் பிரபாகரனையே ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்!!

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைத்தான் அவனோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை”, என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும்...

கபாலி 2 விரைவில்? தாணு

ரஜினி நடிப்பில் கடந்த ஜுலை 22-ந் திகதி வெளிவந்த ‘கபாலி’ பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. வெளிவருவதற்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்த இப்படம், வெளிவந்த பிறகும் சாதனைக்கு மேல் சாதனையை படைத்து வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இரண்டாம் பாகம் வரும் என்பதுபோல முடிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு வாரத்தில் வீடு திரும்புகிறார் கமல்

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து இன்னும் ஒரு வாரத்தில் வீடு திரும்புகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்துவரும் இவர், கடந்த 14-ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு திரைப்பட வேலைகளை முடித்து விட்டு மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே இறங்கினார். அப்போது திடீரென்று தவறி விழுந்தார். இதில், காலில் சதை கிழிந்து ரத்தம் கொட்டியது. வலது காலின்...

விமான நிலையத்தில் ஐஸ்வர்யாராய்க்கு நேர்ந்த அவலம்

லண்டனில் இருந்து திரும்பிய நடிகை ஐஸ்வர்யா ராயை ரசிகர்களும், ஊடகங்களும் முற்றுகையிட்டதால் மும்பை விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அவரது தாய் கீழே விழுந்தார். மகளுக்கும் தலையில் அடி பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆரத்யா மற்றும் தாய் விருந்தா ராயுடன் கடந்த...

மலேசிய கபாலி போலீசில் சரண் அடைந்தாரா?

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரஜினிகாந்தின் கபாலி படத்தின் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் அவர் போலீசில் சரணடைந்ததாக தோன்றும் எழுத்துகள் இந்திய ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான ‘கபாலி’ படம் ரஜினி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்ட காட்சி அவர் துப்பாக்கியால் சுடப்படுவதுபோல் முடிவதில்...

ஆதரவற்ற பிள்ளைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய பரத்!

பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் பரத். இவர் தற்போது என்னோடு விளையாடு, கடுகு, பொட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், என்னோடு விளையாடு, கடுகு படங்கள் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. இதற்கு முன்பு பெரும்பாலும் காதல் நாயகனாக நடித்து வந்த பரத், இந்த படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில், பொட்டு படத்தில் பேய் கதையிலும்,...

நயன்தாராவைப் பார்த்து வியந்த விக்ரம்!

நயன்தாராவைப் பொறுத்தவரை சம்பள விசயங்களில் கறாலாக இருப்பார். அதேபோல் படங்களின் ப்ரமோஷன்களில் கண்டிப்பாக கலந்து கொள்ள மாட்டேன் என்பதிலும் உறுதியாக இருந்து வருகிறார். அதன்காரணமாகவே தெலுங்கில் நடித்த அனாமிகா படத்திற்கு பிறகு ஓராண்டு அவர் தெலுங்கு படங்களில் நடிக்க ரெட்கார்டு போடப்பட்டது. ஆனபோதும், இப்போதும் அவர் தனது கொள்கையில் மாறவில்லை. நடித்து வரும் தெலுங்கு படங்களின்...

கபாலி திரைப்படம் பார்வையிட விடுமுறை அறிவிப்பு

சுப்பர் ஸ்டார் ரஜின் காந்தின் புதிய திரைப்படமான காபலி திரைப்படத்தை பார்வையிடுவதற்கு இந்தியாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் பல நிறுவனங்களில் இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் சுகயீன விடுமுறை எடுத்தல், தொலைபேசிகளை நிறுத்தி வைத்தல், பணிக்கு வராமல் இருத்தல் ஆகியனவற்றை தடுக்க இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கபாலி திரைப்படம் இந்தியாவில் 12000 திரையறங்குகளில் திரையிடப்பட...

ரஜினியுடன் படம் பார்த்தவரே திருட்டு வீடியோ எடுத்து வெளியிட்ட கேவலம்!

அமெரிக்காவில் கபாலி சிறப்புக் காட்சியை நேற்று பார்த்தார் நடிகர் ரஜினிகாந்த். அவருடன் அந்தக் காட்சியைப் பார்த்த ஒருவர் முழுப் படத்தையும் செல்போனில் வீடியோ எடுத்த கொடுமையும் நடந்துள்ளது. தமிழ் சினிமாவை திருட்டு வீடியோ மிகக் கடுமையாக பாதித்து வருகிறது. இந்த திருட்டு வீடியோ உலகமே கொண்டாடும் ரஜினிகாந்த் படத்தையும் விட்டு வைக்கவில்லை. கபாலி படம் நாளை...

நான் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நடிகர்கள் விஜய் சேதுபதி,சுதீப்: தனுஷ்

“நான், சிவகார்த்திகேயனுடன் நடித்து விட்டேன். விஜய் சேதுபதியுடனும், சுதீப்புடனும் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்” என்று நடிகர் தனுஷ் கூறினார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்‌ஷனில், சுதீப்-நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ள ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று காலை நடந்தது. பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிட, நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய...

கபாலியில் ரஜினி அறிமுகமாகும் காட்சி வெளியானதால் படக் குழு அதிர்ச்சி

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இன்றுமுதல் வெளிநாடுகளில் இப்படத்தின் பிரிமீயர் ஷோ திரையிடப்படுகிறது. கபாலி படத்திற்கு திருட்டு விசிடி வெளிவந்துவிடக்கூடாது, மேலும், இணையதளங்களிலும் படத்தை யாரும் வெளியிட்டு விடக்கூடாது என்பதில் படக்குழுவினர் முழு தீவிரமாக உள்ளனர். இந்நிலையில், ‘கபாலி’ படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சி தற்போது இணையதளத்தில்...

வித்தியாசமான கெட்டப் கேட்கும் விக்ரம்!

தமிழ்சினிமாவில் கமலுக்கு அடுத்தபடியாக வித்தியாசமான கெட்டப்புகளில் அதிகமாக நடித்திருப்பவர் விக்ரம். அந்த வகையில், சேது, காசி, பிதாமகன், அந்நியன், ஐ, தெய்வத்திருமகள் என பல படங்களில் அவர் உடலை வருத்தி மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்தார். அதோடு, ஒவ்வொரு கேரக்டர்களுக்காகவும் அதிகமாக மெனக்கெடவும் அவர் தயாராக இருந்து வருகிறார். குறிப்பாக, ஐ படத்திற்காக அடையாளமே தெரியாத அளவுக்கு...

அஜித் படத்துக்காக 30 நாட்கள் கண்விழித்த அனிருத்!

வேதாளம் படத்தில் ஆளுமா டோளுமா என்ற சூப்பர் ஹிட் பாடலை கொடுத்த அனிருத், தற்போது அஜித்தின் 57-வது படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார். தற்போது அவர் சிவகார்த்திகேயனின் ரெமோ பாடல்கள் அனைத்தையும் முடித்து விட்டதால், அப்படத்திற்கான பின்னணி இசையமைப்புகளில் கவனம் செலுத்தியபடி அவ்வப்போது அஜித் படத்திற்கான டியூன் ரெடி பண்ணுவதிலும் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில்,...

ரஜினியின் கபாலி: மேக்கிங் ஆஃப் வீடியோ வெளியீடு!

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் 1 நிமிட மேக்கிங் ஆஃப் கபாலி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

“ஒரே கனா” குறும்படம்

இலங்கை திரைத்துறையில் வளர்ந்துவரும் இளம் இயக்குனர் அசாத் இன் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது குறும்படமான “ஒரே கனா”, இம்மாதம் 16ம் திகதி வெளியாகியுள்ளது. பிரபல கலைஞர் சனாதன சர்மா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள “ஓரே கனா” குறும்படத்திற்கு கார்த்திக் ஔிப்பதிவை மேற்கொள்ள இசையமைப்பாளர் ஷமீல் இசையமைத்திருக்கின்றார். தொடர்புடைய செய்தி “ஒரே கனா” குறும்படம் வெளியீடு
Loading posts...

All posts loaded

No more posts