‘ஒப்பம்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் கமல்?

கடந்த வெள்ளியன்று ஓணம் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் வெளியான படங்களில் மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் உருவாக்கி இருக்கும் 'ஒப்பம்' படம் முதலிடத்தை பிடித்திருப்பதாக தெரிகிறது. இந்தப்படத்தில் கண்பார்வையற்றவராக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மோகன்லால். அதனால் தானோ என்னவோ இந்தப்படம் ரிலீஸாவதற்கு முன்பே சூப்பர்ஸ்டார் ரஜினியும் ரிலீஸான மறுநாளே அஜித்தும் இந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை விரும்பி பார்த்துள்ளனர்....

ஜோதிகாவுக்கு புல்லட் பைக் ஓட்டக் கற்று கொடுத்த சூர்யா

பெண்கள் கார் ஓட்டுவதென்பது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. விமானத்தையே பெண்கள் ஓட்டும் போது காரை ஓட்டுவது பெரிய விஷயமா என்ன?. ஆனாலும், பெண்கள் பைக் ஓட்டுவது என்பது ரொம்பவே ஆச்சரியமான விஷயம்தான். ஸ்கூட்டி, ஸ்கூட்டர் ஆகியவற்றை பெண்கள் அதிகம் ஓட்டுவார்கள். ஆனால், 'கியர்' வைத்த பைக்கை ஓட்டுபவர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது. எப்போதோ ஒரு முறைதான்...
Ad Widget

காவிரி விவகாரம் : போராட்டங்கள் தேவையற்றது-நாசர்

காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் தேவையற்றது என்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் கூறினார். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. குறிப்பாக பெங்களூரில் 144 தடை உத்தரவு போடும் அளவிற்கு வன்முறை உருவாகியிருக்கிறது. மேலும் இருமாநிலத்தின் திரையுலக பிரபலங்களும் போராட்ட களத்தில் இறங்க தயாராகிவிட்டனர். இந்த விவகாரம்...

இனிமேல் ஹீரோவாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த வடிவேலு

காமெடியனாக வலம் வந்துகொண்டிருந்த வடிவேலு, ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறி ஒருசில படங்களில் நடித்தார். முதல் படம் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தாலும், அடுத்தடுத்த படங்கள் அவருக்கு மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்தன. இந்நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கத்திசண்டை’ படத்தின் மூலம் காமெடியனாக களம் இறங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்...

அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பு முடிந்தது

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்பு-கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கூடவே, ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைப்பது படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு...

சூர்யாவின் அப்பாவாக நடிக்கும் கே.எஸ்.ரவிக்குமார்!

தான் இயக்கும் படங்களில் ரஜினி படமாக இருந்தாலும் பாடல் காட்சிகளிலாவது நடித்து விடுவதை வழக்கமாகக் கொண்டு வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். அந்த வகையில், அதேபோல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் அவ்வப்போது நடித்து வந்த அவர், சமீபகாலமாக நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, முடிஞ்சா இவனை புடி படத்தை இயக்கிய பிறகு டைரக்சனைப்பற்றி யோசிக்காமல் நடிப்பதில்...

அஜித் படத்தில் மீண்டும் ‘ஆலுமா டோலுமா’

அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் ‘ஆலுமா டோலுமா’. அனிருத் இசையில் அமைந்த இப்பாடல் படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் வெளிவந்த பிறகு, அந்த பாடலில் அஜித் ஆடிய விதம், அவருடைய கெட்டப் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது. இந்த பாடலுக்கு கல்யாண்...

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் மந்த்ரா பேடி!

பிரபல வட இந்திய நடிகை மந்த்ரா பேடி. சிம்பு நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான 'மன்மதன்' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதன் பிறகு தமிழ் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தவர் 12-ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளர் , நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை...

நேற்று டீசர் வெளியிடப்பட்ட மூன்று மெகா படங்கள்

சமீபகாலமாக ஒவ்வொரு படங்களின் பர்ஸ்ட் லுக், டீசர், டைட்டீல், ஆடியோ என ஒவ்வொன்றாக வெளியிட்டு அந்த படங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், நேற்று ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா-தமன்னா நடித்துள்ள தேவி, காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜயசேதுபதி-ரித்திகா சிங் நடித்துள்ள ஆண்டவன் கட்டளை, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள புருஸ்லீ ஆகிய படங்களின் டீசர்கள் இணையதளத்தில்...

விஜய், அட்லி கூட்டணி உறுதியானது!

விஜய் நடித்த தெறி படத்தை இயக்கியவர் அட்லி. அதன்பிறகு இரண்டு படங்களை தயாரித்து வருபவர், தான் இயக்கும் புதிய படம் குறித்த தகவலை வெளியிடாமல் வைத்திருந்தார். அதுகுறித்து கேட்டபோது, இப்போதைக்கு அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தை மட்டுமே நடக்கிறது. இன்னும் முடிவாகவில்லை, முடிவானதும் நானே தெரிவிப்பேன் என்று கூறி வந்தார். அதோடு டைரக்டர் மகேந்திரன் இயக்கும்...

கௌதம் மேனன், சிம்பு சமரசம்

வெறும் கையால் முழம்போடுவது என்ற சொல்வார்கள். இது இயக்குநர் கௌதம் மேனனுக்குத்தான் மிகவும் பொருந்தும். கையில்போதிய பணம் இல்லாமலேயே முன்னணி ஹீரோக்களை வைத்து படத்தைத் தொடங்கிவிடுவார். ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் ஹீரோக்கள் ஒருகட்டத்தில் சம்பளத்தைக் கேட்கும்போது, படப்பிடிப்பையே நிறுத்திவிடுவார். இப்படித்தான், கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வளர்ந்த வந்த 'அச்சம் என்பது மடமையடா' படம்...

பஞ்ச் டயலாக் வேண்டாம்! விஜய் திடீர் முடிவு!!

ரஜினிக்கு பிறகு விஜய் நடித்த படங்களில் அதிரடி பஞ்ச் டயலாக்குகள் அதிகமாக இடம்பெற்று வந்தன. ஆரம்பத்தில் கதைக்காக எழுதப்பட்ட பஞ்ச் டயலாக்குகள்கூட பின்னர் அரசியலை அட்டாக் பண்ணும் விதத்தில் இடம்பெற்று வந்தன. இதற்கு தியேட்டர்களில் விசில் பறந்தபோதும், அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்புகள் அதிகரித்தன. இதனால் ஒருகட்டத்தில் விஜய் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. அதனால்...

பாலா படத்தில் நடிக்கத் தயங்கும் முன்னணி ஹீரோக்கள் ?

தமிழ்த் திரையுலகில் கமர்ஷியலாகப் பெரிய வெற்றிப் படங்களை அளிக்கவில்லை என்றாலும் இயக்குனர் பாலாவை, சிறந்த இயக்குனராக திரையுலகமும், ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற இயக்குனர்களிடமிருந்து தனித்துத் தெரியும் வகையில் படங்களைக் கொடுப்பவர் இயக்குனர் பாலா. விக்ரம், சூர்யா, ஆர்யா ஆகியோருக்குப் பெரிய திருப்புமுனைகளைக் கொடுத்து அவர்களை இன்று பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்களாக...

ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்

இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர, பி.வாசு இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சிவலிங்கா’ படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரஜினியை வைத்து ‘சந்திரமுகி-2’ படமாக எடுக்க பி.வாசு திட்டமிட்டிருந்தார். ஆனால், ரஜினி தொடர்ந்து பிசியாக இருப்பதால் ராகவா லாரன்ஸை நடிக்க வைத்துள்ளார். இப்படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள...

அஜித்தின் அடுத்த செண்டிமென்ட்!

சமீபகாலமாக சில விசயங்களை செண்டிமென்டாக கடைபிடித்து வருகிறார் அஜித். அதில் வியாழக்கிழமை முக்கியமானது. தான் நடிக்கிற படங்களின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவர் வியாழக்கிழமைகளில் தான் ஆரம்பித்து வருகிறார். அது அவருக்கு தொடர் வெற்றிகளை கொடுத்து வருவதால், அதே வியாழக்கிழமை செண்டிமென்ட் தற்போது மீண்டும் சிவா இயக்கத்தில் நடித்து வரும் 57-வது படத்திலும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே...

செல்வராகவன் இயக்கத்தில் விஜய்?

விஜய் தற்போது தனது 60-வது படமாக பரதன் இயக்கும் ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறித்து கோலிவுட்டில் பரவலாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, விஜய் அடுத்ததாக ‘தெறி’ படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் நடிக்கப்போவதாக...

இயக்குநராகும் நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ், டைரக்டர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் ஆவார். இவருடைய அண்ணன், டைரக்டர் செல்வராகவன். கஸ்தூரிராஜா டைரக்டு செய்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கடந்த 2002-ம் ஆண்டில் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமானார். காதல் கொண்டேன், திருடா திருடி, தங்க மகன், படிக்காதவன், யாரடி நீ மோகினி, மாரி, மாப்பிள்ளை, ஆடுகளம், வேங்கை, மரியான், நையாண்டி,...

ஆஸ்கர் விருது பெறும் ஜாக்கி சான்!

வாழ்நாள் சாதனைக்காக பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது. படத்தொகுப்பாளர் கோட்ஸ், காஸ்டிங் இயக்குநர் லின் ஸ்டால்மாஸ்டர், ஆவணப்பட இயக்குநர் வைஸ்மேன் ஆகியோரும் ஜாக்கி சானுடன் இணைந்து இவ்விருதைப் பெற உள்ளார்கள். நவம்பரில் நடைபெறுகிற விழாவில் ஜாக்கி சான் உள்ளிட்ட நாலு பேருக்கும் வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படும் என்று...

இருமுகனில் விக்ரம் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை: இயக்குனர் ஆனந்த் ஷங்கர்

வரும் வாரம் வெளியாகவுள்ள இருமுகன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று இத்திரைப்படத்தின் இயக்குனார் ஆனந்த் ஷங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி விபரம் வருமாறு: இந்த திரைப்படத்தில் விக்ரம் அகிலன் என்னும் 'ரா' அதிகாரி மற்றும் 'லவ்' என்னும் விஞ்ஞானி ஆகிய இரு கதாபாத்திரங்களை...

‘பைரவா’ மீண்டும் ஒரு ‘கோட்’ சர்ச்சை

'கபாலி' படத்தில் ஏறக்குறைய படம் முழுவதுமே ரஜினிகாந்த் 'கோட்' அணிந்தே நடித்திருப்பார். அந்த 'கோட்' அணிதலுக்கான காரணமும் படத்தில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இருந்தாலும் அந்த 'கோட்' விவகாரத்தையே சர்ச்சையாக்கி சமூக வலைத்தளங்களில் பலர் குளிர் காய்ந்தனர். 'கபாலி' படம் தற்போது ஓடி முடித்துள்ள நிலையிலும் அந்த 'கோட்' விவகாரம் அடிக்கடி எழுந்து கொண்டுதான் இருக்கிறது....
Loading posts...

All posts loaded

No more posts