- Sunday
- July 6th, 2025

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் நேற்று (07) நிறைவு பெறும் நேரத்தில் குளவி கூடு கலைந்து தாக்கியதில் காயமடைந்த 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க்பபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளின் நடவடிக்கையால் குளவி கூடு கலைந்துள்ளது....

இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியில் இருந்து கலையரசி எனும் தமிழ் மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இந்த மாணவி மேற்படி அணிக்குத் தெரிவாகியுள்ளமை பல்வேறு தரப்புகளின் கவனங்களையும் ஈர்த்துள்ளது. கிளிநொச்சி...

வவுனியா குருமன்காட்டை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குருமன்காடு பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் நேற்றய தினம் அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வவுனியா...

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை முதல் காத்திருந்த மக்கள் ஏ-9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தினமும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வருகின்றனர். கிளிநொச்சிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ள நிலையில்...

கொழும்பு காலிமுகத்திடல் “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பத்தர் துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். இன்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கினர். கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற 32 வயதுடைய குடும்பத்தரே இவ்வாறு...

முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக சென்ற நிலையில் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்டது. அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர் . இந்த நிலையில்...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை முதன் முதலாக வாய், மூக்கு, தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி சுகந்தன் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று மேற்படி சிகிச்சைகளை பெற்று வந்த பொது மக்கள் இனிவரும் காலங்களில் குறித்த சிகிச்சைகளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியும்...

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர். பின்னர் குருதியினை கடதாசி மூலம் துடைத்துவிட்டு கிருமி தொற்று நீக்கி...

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் (08) மகளிர் தினத்தை துக்க தினமாக கடைபிடித்து முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம்...

நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு என்பது ஜனாதிபதியின் தோற்றுப்போன மனநிலையை உலகிற்கு காட்டி நிற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்றும் தெரிவித்தார். விவசாயத்தை தமது ஜீவனோபாயமாக கொண்டு வாழ்ந்துவரும் மக்கள், இயற்கை...

கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13 ஆம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்தனர். 12 இந்திய மீனவர்களும் B/202/2022 ,B/203/2022...

இராணுவத்தினால் கண்ணன் தேவாலய வளாகத்தில் சனிக்கிழமை (05) கிளிநொச்சியை சேர்ந்த 42 வறிய குடும்பங்களுக்கு பிரதேசத்திலுள்ள நன்கொடையாளர்களின் உதவியுடன் உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இத்திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி சஞ்சய வணசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 571, 572...

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி நேற்று (வியாழக்கிழமை )பிற்பகல் 2 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது குறித்த திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதி அமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி லெனின் குமார் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் பொது மக்களை அவதானமாகவும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் நடந்துகொள்ளுமாறு மாவட்ட சுகாதார பிரிவினர் பொது மக்களை கேட்டுள்ளனர். கடந்த 24ம் திகதி மாவட்டத்தில் 66 தொற்றாளர்களும், 25ம் திகதி 40 தொற்றாளர்களும் இனம் காணப்பட்டுள்ளனர். தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டவர்களில் மேற்படி எண்ணிக்கையான தொற்றாளர்கள்...

ஜனாதிபதியின் பசுமை விவசாய செய்கை திட்டத்தின் கீழ் இயற்கை உரத்தினை பயன்படுத்தி முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விவசாய நெற்செய்கையின் அறுவடை விழா நேற்று 26.01.2022 சிறப்புற நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடல் கரையினை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள 591 ஆவது படைப்பரிவின் தலைமையக முகாமின் பின்...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11.45 மணியளவில் பரவிய பாரிய தீ பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இராணுவ தீயணைப்பு பிரிவினரும் களத்தில் இறங்கி மேலும் தீ பரவாத வகையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில்...

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டார் என்று அவரது கணவர் பொலிஸில் ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார். பெண்ணின் தலையில் காயம் காணப்பட்டதாகவும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா அறிக்கையிட்டுள்ள நிலையில் பொலிஸாரின் விசாரணையில் பெண்ணின் கணவர் குற்றத்தை...

கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள் இன்று (03) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி குணரட்னம் கார்த்தீபன் எனும் 24...

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார். சந்தேக நபர் இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மாங்குளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் அதற்கான பணத்திற்காகவே வயோதிப பெண்ணை கொலை செய்ததாக கிளிநொச்சி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஓட்டுத் துண்டுகளை துணியில் சுற்றி குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து ஒரு சோடி...

All posts loaded
No more posts