கொரோனா வைரஸின் தாக்கம் – ஒத்திவைக்கப்பட்டது பொதுத் தேர்தல்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது தேர்தலை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த தகவலை வெளியிட்டார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேரதல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்த... Read more »

பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதா இல்லையா? – மார்ச் 25இல் தீர்மானம்

பொதுத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா தொடர்பில் மார்ச் 25ஆம் திகதி முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர் தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு... Read more »

கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் வடக்கு, கிழக்கில் வேட்பு மனுத்தாக்கல்

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் இன்று காலை வடக்கு, கிழக்கில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.00 மணிமுதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக, முதன்மை... Read more »

தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பு மனுவில் நால்வர் கையொப்பம்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (இலங்கை தமிழ் அரசுக் கட்சியில்) போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையோப்பமிட்டனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பணிமனையில் இன்று நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுவில் 4 வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர். தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்... Read more »

2020 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை போறுப்பேற்கும் பணி இன்று ஆரம்பம்!!

2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள 22 மாவட்ட செயலகங்களில் இன்று ஆரம்பமாகுகின்றது. இதற்கமைவாக எதிர்வரும் 12ஆம் திகதி வரை வார நாட்களில் காலை 9 மணிமுதல் மாலை 4.30 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.... Read more »

தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் கால எல்லை நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதனால் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ள வாக்காளர்கள் விரைவாக விண்ணப்பங்களை... Read more »

“கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை… வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு நாளை!!” – சிவாஜிலிங்கம்

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்... Read more »

மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளியானது!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஆகக்கூடிய உறுப்பினர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தெரிவாக இருப்பதுடன்... Read more »

பொதுத்தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன!

நடைபெறவுள்ள பொதுதேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இன்று(வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ... Read more »

யாழ்ப்பாணத்தில் சுயேட்சை குழு சார்பில் கட்டுப்பணம்!!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை சுயேட்சை குழு ஒன்று செலுத்தியுள்ளது. மயில்வாகனம் விமலதாஸ் என்பவரே சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கு பணம் செலுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் சார்பிலையே இந்தச் சுயேட்சை குழு போட்டியிட உள்ளதாக அறிய முடிகிறது. Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் வடக்கில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம்!

வரும் ஏப்ரல் 25 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சமூக ஊடகங்களில் அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களைப் போன்று இம்முறையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கீழ் அதன் சைக்கிள்... Read more »

தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்!

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய... Read more »

வாக்காளர் எண்ணிக்கை 271,789 ஆல் அதிகரிப்பு!!!

2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவாக ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்காளர்ளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைவாக எதிர்வரும் தோர்தல்களில் வாக்களிப்பதற்கு இவர்கள் தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு வாக்களார் இடாப்புக்கு... Read more »

பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கும் மே மாதம் 4 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண் தெரிவித்த அவர்,... Read more »

நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தும்படி கோட்டாவிடம் மஹிந்த கோரிக்கை

நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், அரசியல் பழிவாங்கள், முரண்பாடான அரசியல் நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டு நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியாது என்று அவர்... Read more »

பிரபாகரனை பொதுத் தேர்தலில் களமிறக்கின்றார் முத்தையா முரளிதரன்!!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சகோதரர் முத்தையா பிரபாகரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளார். அவர் நுவரெலியா மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியே எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டள்ளார். இதேவேளை தான் பொதுத் தேர்தலில் பொதுஜன... Read more »

70 புதிய கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பம்!

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியுடன் நிறைவு பெறவுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். 70 புதிய கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சில கட்சிகளின் பதிவை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்... Read more »

இந்த ஆண்டு தேர்தல் வருடமாகும் – பிரதமர்

இந்த ஆண்டு தேர்தல் வருடமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(புதன்கிழமை) கதிர்காம புனிதத் தலம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பிரதமர் முதலில் கதிர்காம புனிதத் தலத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது புனிதத் தலத்தின்... Read more »

தேர்தலில் கொழும்பிலும் போட்டியிட கூட்டமைப்பு திட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 33 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்தனர்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 33 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்துள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ (52.25%) மற்றும் சஜித் பிரேமதாச (41.99%) ஆகியோர் மட்டுமே 5% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர். எனவே ஏனைய 33... Read more »