- Friday
- September 19th, 2025

இன்று காலை இந்திய - மியன்மர் எல்லை அருகே, வடக்கிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இந்திய வானிநிலை ஆய்வு மைய தகவல்படி மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள்...

பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப் படை தளத்திற்குள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நுழைந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு வீரர்கள் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இருதரப்பினரிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருவதால் ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். இரண்டிற்கும் மேற்பட்டவர்கள்...

தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்ல ஆடைக் கட்டுப்பாடுகள் இன்று முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்கள் ஜீன்ஸ், பெண்கள் ஸ்கர்ட் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கோவில் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்தார். அந்த வழக்கில் கடந்த...

இந்திய மீனவர்கள் 51 பேர் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்.சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். குறித்த மீனவர்கள் இன்று வியாழக்கிழமை காலை முதல் தமது உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளார்கள். கடந்த தினங்களில் பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு கடற்ப்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குறித்த 51 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், பண்டிகைக்...

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவதற்காக வடக்கு மாகாண சபையினால் சேர்க்கப்பட்டுவரும் நிதி உரிய காலத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் கையளிக்கப்படும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். நேற்றைய தினம் வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்திய...

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி - கொழும்பு மற்றும் ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய கடல் வழித்தடங்களை விரைவில் துவக்க இந்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுகவின்...

இந்தியா உள்ளிட்ட மேம்பட்ட நாடுகளின் உதவியுடன் நாட்டு ராணுவம் நவீனமயமாக்கப்படும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த சில படைப் பிரிவினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு, தியாதலாவா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ரணில் விக்ரமசிங்க பேசியதாவது: ஆசியக் கண்டத்தில் இந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு அடுத்தபடியாக பழைமையானது இலங்கை ராணுவம்....

தமிழ்நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வடக்கு மாகாண சபையினால், திரட்டப்படும் நிவாரண நிதி உதவியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத் துயருக்கான உதவிகளை இந்திய அரசாங்கம் வெளிநாடுகளிடம் கோரவில்லை என்றும், இதனால் இந்த உதவிகளைத் தமது பணியகத்தினால் பெற முடியாதிருப்பதாகவும், இந்தியத் துணைத்...

இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு பாலம் அமைப்பது தொடர்பான திட்டத்தில் இந்தியா கவனம் செலுத்தியிருப்பதாக, இந்திய மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை தலைவழிப்பாதை வழியாக இணைக்கும் திட்டங்களை இந்தியா நடைமுறைப்படுத்தி வருகிறது. பங்களாதேஸ், பூட்டான், நேபாளம் ஆகிய...

நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட சாட்சியாளர்கள் எட்டுப்பேரையும், ஜனவரி மாதம் 18ஆம் திகதியன்று சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னை சூளைமேட்டில், 1986ஆம் ஆண்டு, தீபாவளி கொண்டாடத்தின் போது டக்ளஸ் உள்ளிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், சென்னை பிரஜையொருவரைச் சுட்டுக்கொன்றதாகக்...

தமிழகத்தில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் அதிகபட்சமாக விமானத்தின் மூலம் கொண்டுவர அனுமதிக்கப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையம் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 40 கிலோகிராம் நிறையுடைய பொருட்களை மாத்திரமே விமானத்தின்...

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ரூ. 87.29 கோடி செலவில், 200 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை இந்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வவுனியா, அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோக்கத்தில் அதன் உள்கட்டமைப்பு...

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சென்னை டாக்ஸி சாரதி இந்தியாவில் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூமிதுரை எனப்படும் டாக்ஸி சாரதியின் சடலம் அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சடலத்துடன் காணப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், 41 வயதான குறித்த சாரதி உயிருடன் இருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....

தமிழ் நாடு காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களும் நேற்று முன்தினம் இரவு பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களிடமிருந்து 1 படகு கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்.கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் சென்னையிலும் தமிழகத்தின் வேறு பல பகுதிகளிலும் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் பல வடமராட்சி கரையோரங்களில் கரையொதுங்கி வருகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள், மரக்கதவுகள், மற்றும் இலகுவாக மிதக்கக்கூடிய பொருட்களே இவ்வாறு அதிகளவில் கரையொதுங்குகின்றன. இதனால் வடடமராட்சியின் கரையோரங்களில் அதிகளவு குப்பைகள் தேங்கியுள்ளன.

சென்னையில் பெய்த கன மழைக்கும் எல் நினோவுக்கும் சம்பந்தமில்லை என்பது மாதிரியான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், நேரடியாக எல் நினோ தாக்கம் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் வானிலையில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தை எல் நினோவின் பாதிப்பு மேலும் அதிகரித்துவிட்டதாக நாஸா தெரிவித்துள்ளது. பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில்...

கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக சென்னை நகரின் பல பகுதிகளில் மழை பெய்யாத நிலையில், நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பப் போராடிவருகிறது. டிசம்பர் 2ஆம் தேதியன்று சென்னையைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தின் காரணமாக, தற்போதும் அடையாறு, கூவம் ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகளும் தாம்பரம், முடிச்சூர், வடசென்னையின் பல பகுதிகளும் இன்னமும் பாதிப்பிலிருந்து மீளாமலேயே காட்சியளிக்கின்றன. பல பகுதிகளில்...

சென்னையில் கொட்டித் தீர்த்த பெரு மழையால் சில சிறப்பான மனிதர்களின் மரணச் செய்திகளும் கூட மழையோடு மழையாக அடங்கிப் போனது பெரும் சோகம்தான். தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக வெளிவர முக்கிய பங்காற்றியவர் ஸ்ரீநிவாஸ். தமிழில் பல்வேறு மென்பொருட்களை அறிமுகம் செய்தவர். ஆன்மிக இதழாக வெளிவந்த "தெய்வ முரசு" மாத இதழின் பதிப்பாளராக இருந்த...

தமிழகத்தின் புதுக்கோட்டை அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் சார்பில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணி மணிகளை வேன் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைத்தனர். சென்னையில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிவாரண உதவி செய்ய வேண்டுமென முகாம் மக்கள் நலக்குழுத் தலைவர் ச.கமலநாதன், நிர்வாகிகள், இளைஞர்கள், மாணவர் மன்றம், விளையாட்டுக்குழு,...

திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சடலங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் 6 சடலங்கள் மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்திருந்தனர். தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விடயம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கடற்படை படகுகள் தேடுதலுக்கு அனுப்பப்பட்டன. தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு...

All posts loaded
No more posts