- Thursday
- August 28th, 2025

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவைமாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

அரச பல்கலைக்கழகங்களில் 28, 29 ஆம் திகதிகளில் வேலைநிறுத்த போராட்டம் – யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் புதன்கிழமை (28) மற்றும் வியாழக்கிழமை (29) ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் புதன்கிழமை (28) யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் 20.02.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட...

கனடாவிற்கு அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது யாழ். செம்மணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2022ஆம் ஆண்டுக்கும்...

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர...

நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் உக்ரைனில் போரிடுவதற்காக தங்களது துருப்புக்களை அனுப்பினால் தமது படையினருக்கும் நேட்டோ இராணுவக் கூட்டணிக்கும் இடையேயான மோதலை தவிர்க்க முடியாது என ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு யுத்தம் மேற்குலக நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேட்டோவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான நேரடி மோதலின் ஆபத்துகள் குறித்து...

மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினர் தடை விதித்த நிலையில்...

உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு , யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் யாழ்,நகர் பகுதியில் விற்பனை செய்த உணவு பொருட்கள் காலாவதியாகியவை என தெரியவந்த நிலையில் , யாழ்ப்பாண பொலிஸாரினால் சிறுமி...

யாழில் சக பொலிஸ் அதிகாரிகளுடன் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்து மோதலில் ஈடுபட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாரின் விடுதிக்குள் நேற்று முன்தினமிரவு மதுபோதையில் உள்நுழைந்த குறித்த பொலிஸ் அதிகாரிகள் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கைது செய்யப்பட்டு...

ஆவரங்கால் பகுதியில் விசர்நாய் கடிக்குள்ளான இளைஞரொருவர் நேற்று (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த 23 வயதான பிரதாபன் ஷாலமன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நாய் கடிக்குள்ளாகி இயலாமைக்குள்ளான குறித்த இளைஞன் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்....

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளின் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து கடந்த வாரம் மாத்திரம் இரண்டு மரணங்கள் பதிவான நிலையிலும் அதனை யாரும் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரில் இருந்து காரைநகர் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள்...

வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அல்லது ஏனைய பானங்களை அருந்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். இதன்போது வியர்வையுடன் அதிக சோடியம் வெளியேறுவதால், ஆரஞ்சு, இளநீர், தேங்காய் தண்ணீர், கஞ்சி, ஆரஞ்சு...

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியை நடாத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முடித மகவத்தகே தெரிவித்துள்ளார். யாழில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு நெரிவித்தார். இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிகழ்வை முன்னிட்டு, “நட்பின் சிறகுகள்” எனும்...

யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் சிறிய ரக வாகனம் ஒன்று இன்று (26) தீக்கிரையாகியுள்ளது. யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே தீக்கிரையாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது குழுவினரால் தீ வைக்கப்பட்டதா? என்பது தொடர்பில் தெரிய வராத நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார்...

வடமராட்சியில் தரம் 6க்கு புதிதாக இணைந்த மாணவனை மீது தரம் 10இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதனால், காதிலிருந்து இரத்தம் கசிந்த நிலையில், தாக்கப்பட்ட மாணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான். நெல்லியடி பகுதியிலுள்ள பாடசாலையொன்றிலேயே கடந்த வியாழக்கிழமை (22) இந்தச் சம்பவம் இடம்பெற்றது....

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைய தினம் (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது...

காதல் மனைவிக்கு பரிசளிப்பதற்காக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரும், அவருக்கு உடந்தையா செயற்பட்ட பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட இரு சந்தேகநபர்களிட் இருந்து, 25 பவுண் தாலி கொடி ஒன்றும், 4 பவுண் நகை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் முதியவர்கள் வசித்து வந்த வீடொன்றில் காதலர் தினத்தன்று, உட்புகுந்த திருடர்கள் 29 பவுண் நகைகளை...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்று கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க தீர்மானித்துள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம்...

மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி மின்சார சபையால் கிடைக்கும் இலாபத்தை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இது தொடர்பான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின்...

கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை உறுப்பினர்களாக செயற்படுவதை தடைசெய்யும் வகையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து கட்டாணை ஒன்றினை பிறப்பித்துள்ளது. திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் நேற்று(21) இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் மேற்குறித்த இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி சண்முகம்...

யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ’ குற்றச் செயல்களுடன் ஈடுபட்டமை தொடர்பாக நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

All posts loaded
No more posts