தபால்மா அதிபர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

பொதியொன்றுக்கான கட்டணத்தை செலுத்துமாறு இலங்கை தபால் திணைக்களத்தைப் போன்று அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் போலியானவை என்று தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யு.ஆரி.பி.சத்குமார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை தபால், இலங்கை தபால் திணைக்களம், எஸ்.எல்.போஸ்ட் அல்லது ஸ்ரீலங்கா போஸ்ட் என்ற பெயர்களில் இந்த போலி குறுஞ்செய்திகள் அனுப்படுகின்றன. எனவே இவற்றில் கடன்...

வெடுக்குநாறிமலை ஆலய பிரச்சினை : ஒன்றுகூடி ஆராயத் தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு

வெடுக்குநாறிமலை ஆலயப் பிரச்சினை தொடர்பாக ஒன்றுகூடி ஆராய்வதற்குத் தமிழ்த் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலையில் கடந்த மகா சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளை மேற்கொண்டவர்களைப் பொலிஸார் கடுமையாகத் தாக்கிக் கைது செய்திருந்தனர். ஆலயப் பூசகர் உட்பட 8 பேர்...
Ad Widget

யாழில் இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு பயன்படுத்திய கார் மீட்பு!

யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து திங்கட்கிழமை 23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை குற்றச்சாட்டின் கீழ் ஐந்து சந்தேகநபர்கள் செவ்வாய்க்கிழமை (12), யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கார் அராலி மேற்கு...

வெடுக்குநாறிமலை சம்பவம் ; கைதுசெய்யப்பட்டவர்கள் உண்ணாவிரதம்!!

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில்...

வட்டுக்கோட்டை கொலைச்சம்பவம் தொடர்பில் நான்குபேர் கைது!!

வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை அராலி பகுதியைச் சேர்ந்த 37, 32,25, 22 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.சந்தேக நபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை...

வெடுக்குநாறிமலை வழக்கு: மேன்முறையீடு செய்யவுள்ளதாக சட்டத்தரணி சுகாஸ் தெரிவிப்பு!

வவுனியா, வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக குறித்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட எட்டு அப்பாவி சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு அழைக்கப்பட்டது. பெரும் சட்டப்போரட்டமாகவே அது அமைந்திருந்தது. இருப்பினும் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....

வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சிப்போராட்டமே ஒரே வழி!

எமக்கான நீதியினை அடைவதற்கு வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சிப்போராட்டமே ஒரே வழி” என்று சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் அறைகூவல் விடுத்துள்ளார். வெடுக்குநாறிமலை வழக்கை பார்வையிடுவதற்காக நேற்று வவுனியா வருகைதந்த அவர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதன்போது, இலங்கை பொலிசாரின் அடாவடி அளவு கடந்து செல்வதாகவும், கைது செய்யப்படுவதற்கான...

யாழில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி

வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த வாள்வெட்டு சம்பவம் நேற்று(11.03.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த இளைஞன் காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போதே குறித்த வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலட்சினையை அனுமதியின்றி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டு்ள்ளதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 14ஆம், 15ஆம், 16ஆம் திகதிகளில் நடைபெறுவதையொட்டி பல்வேறு ஒளிப்பட, வணிக மற்றும் விற்பனை...

வெடுக்குநாறிமலை மகா சிவராத்திரி விவகாரம்: யாழில் போராட்டம்

வவுனியா வெடுக்குநாறிமலையின் பூசகர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமைக்கும், பொலிஸாரின் அடாவடி நடவடிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று யாழ். நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மகா சிவராத்திரி தினமான கடந்த வெள்ளிக்கிழமையன்று வவுனியா, வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றிருந்தன. இதன்போது அங்கு வந்த பொலிஸார், பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, பூஜைப் பொருட்களையும் வீசி செயற்பட்ட...

15 வயது சிறுவன் கசிப்புடன் கைது!

சரசாலை பகுதியில் 4 .5 லீற்றர் கசிப்புடன் 15 வயது சிறுவனொருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் பொதுமக்களிடம் காணி கையளிப்பு!

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 70 ஏக்கர் காணி நிலங்களும், கிளிநொச்சி...

இராணுவ வாகனம் மோதியதில் வயோதிபப் பெண் படுகாயம்!

எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்று மாலை இராணுவ வாகனமும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிபப் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர் 60 வயதான சிதம்பரப்பிள்ளை வசந்தாதேவி எனத் தெரிய வந்துள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தையிட்டி விகாரை காணிக்கு மீண்டும் கிளம்பிய எதிர்ப்பு

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு காணியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் களமிறங்கியுள்ள நிலையில் குறித்த விடயத்துக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தையிட்டி விகாரையுள்ள 8.04 ஏக்கர் காணியை சட்டப்படி வழங்குமாறு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவுக்கு இராணுவம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய...

வல்வை முதியோர் இல்லத்தின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை

வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் விடுத்த பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச செயலாளருக்குக் கடிதம் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வல்வை முதியோர் இல்லம் எவ்வித வசதிகளும் இன்றியும் இதுவரை பதிவு செய்யாமலும் இயங்கியமை தொடர்பில் உரிய சட்ட...

செங்கடலில் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்களுடன் பயணித்த கப்பல் தாக்கி அழிப்பு!!

செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை, இந்தியா உட்பட வெளிநாட்டு பணியாளர்களுடன் பயணித்த கப்பல் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். 23 பணியாளர்களுடன் பயணித்த பார்படோஸ் கொடி பறக்கவிடப்பட்ட MV True Confidence என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில்,...

சாவகச்சேரியில் பொலிஸார் மீது தாக்குதல்!! இருவர் கைது

சாவகச்சேரி பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மூவரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்களே,அதனைத் தடுக்க வந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச்செல்ல முயற்சித்த வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றிய பொலிஸார் இது...

யாழில். இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப கண்காட்சி

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி யாழ். முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இன்று (06)ஆரம்பமான கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. கண்காட்சிகள் நடைபெறும் தினங்களில், விமானப் படையின் சாகச நிகழ்வுகள் கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன. இந்த கண்காட்சிகளுக்கு பாடசாலை மாணவர்களுக்கு...

சுழிபுரம் புத்தர் சிலை விவகாரம் – பாரிய போராட்டம் வெடிக்கும் எச்சரிக்கை!!

சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரணில் ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் இவ்வாறான ஆக்கிரமிப்புகள் மிகத் தீவிரம் பெற்றுள்ளதாகவும் அதன் மற்றுமொரு பரிமாணம் தான் இந்த புத்தர் சிலை என...

யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட மீனவ அமைப்புக்கள் இணைந்து யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனைத்...
Loading posts...

All posts loaded

No more posts