- Tuesday
- August 26th, 2025

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்குச் சென்ற போது, ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த வடமாகாண ஆளுநர் பி....

கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதன் காரணமாகவே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்திலுள்ள சில பாடசாலைகள் உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் புதிய ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்த ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். யாழ்.மாவட்டத்திலுள்ள புதிய ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் தந்தை...

ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 35க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் சிறுவர்கள் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டல் அஸ் சுல்தான் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல் காசா நகரம் உட்பட வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதில் பலர்...

இலங்கையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் இன்று (27.05.2024) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவு 12...

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஊர்வலமாக வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். "ஊழியரின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொள், MCA கொடுப்பனவை அதிகரி, கல்விசாரா ஊழியர்களை மாற்றான் வீட்டு...

யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றையதினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளதுடன், அதனை வீட்டில் சாப்பிட முனைந்த போது, பாணினுள் இருந்து உடைந்த போத்தலின் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து...

இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு கூட தயாராக இருந்ததாக குஜராத் பொலிஸ்மா அதிபர் விகாஷ் சாஹே தெரிவித்துள்ளார். இந்த நான்கு பயங்கரவாதிகளும் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு பகுதிகளில் வசிப்பவர்கள் என குஜராத் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின்...

யாழில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] இது குறித்து மேலும் தெரிய வருவதாவது” பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை நடவடிக்கைக்காக நேற்றைய தினம் இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ளனர்....

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்றைய தினம், இராணுவத்தினருக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனமொன்று வீதியை கடக்க துவிச்சக்கர வண்டியுடன் காத்திருந்த யுவதி மீது மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த...

சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் , சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து ,விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், கைது...

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படவுள்ளது. நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுக்கான அழைப்பு கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் நேற்றைய தினம்...

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக நாட்டில் இன்றைய தினத்தை துக்க தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இன்று அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி...

வரலாற்றில் முதன்முறையாக இந்தியன் ஒயில் நிறுவனமான IOC ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதன்படி, கடந்த 18 ஆம் திகதி மும்பாய் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து இந்த எரிபொருள் தொகை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெற்றோல் வகை XP 100 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவு இயந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வுக்கு உழவு இயந்திரத்தில் பயணித்த...

ஐஎஸ் அமைப்பபை சேர்ந்தவர்கள் என கருதப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வர் குஜராத்திற்கு செல்ல முற்பட்டவேளை அஹமதாபாத்தில் கைதுசெய்யப்பட்டமை குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த சந்தேகநபர்களின் பின்னணி குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் அவர்கள்...

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுசீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது டென்மார்க் பிராஜவுரிமை பெற்று டென்மார்க்கில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் கடந்த 2015ஆம்...

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரைசிக்கு மேலதிகமாக அங்கு பயணித்த ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனும் நேற்று (19) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அசர்பைஜானில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மற்றும் 9 பேர் பயணித்த...

பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று (20) உயிரிழந்துள்ளார். வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார். வீதியை கடப்பதற்காக குறித்த யுவதி வீதியோரம் நின்றுள்ளார். இதன்போது, யுவதி நின்ற கரைக்கு மறுகரையாக - எதிர்திசையில் புத்தூர் சந்தியிலிருந்து இராணுவ உயரதிகாரிகள் பயணித்த வான் வேகமாக வந்தது....

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்து விபத்துக்குள்ளான ஹெலிக்கொப்டரை மீட்பு பணியாளர்கள் கண்டுபிடித்துள்ள அதேவேளை அந்த ஹெலிக்கொப்டரில் பயணம் செய்தவர்களில் எவரும் உயிருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிக்கொப்டரில் பயணம் செய்தவர்கள் எவரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என சர்வதேச செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி இந்த படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் சில காரணங்களால் இன்று (17) வரை ஒத்திவைப்பதாக கப்பல் சேவை நிறுவனம் அண்மையில் அறிவித்தது. எனினும் எதிவரும் 19ஆம் திகதி வரை...

All posts loaded
No more posts