- Monday
- May 4th, 2026
பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலைகளுக்கான சகல பரீட்சைகளுக்கும் உரிய விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முறை அடுத்த வருடம் முதல் ஒன்லைன் முறையின் கீழ் இடம்பெறவுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையிலிருந்து இந்த முறைமையை பின்பற்றுவது நோகக்கமாகும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. சகல மாணவர்களுக்குமான தனியான இலக்கங்கள் இதன் கீழ் வழங்கப்படவிருக்கின்றன. மாணவர்களின் பெறுபேறுகள் உட்பட வெளிக்கள செயற்பாடுகள்...
பகிடிவதை காரணமாக அண்மையில் பல்கலைக்கழக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவரின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆவா குழு ஃபேஸ்புக் ஊடாக உரிமை கோரியுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய், நவாலி வீதியிலுள்ள வீட்டில் முகங்களை மூடிக்கொண்டு சென்ற அடையாளம் தெரியாதோரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வீட்டின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், சொத்துகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட...
நாட்டின் ஐந்து நகரங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, வவுனியா, புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களிலேயே தூசு துகள்கள் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த மாத இறுதி வரை இந்த நிலை நீடிக்கும் எனவும் தேசிய கட்டட...
எரிபொருள் விலையும் நீர் கட்டணமும் அதிகரிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தேசிய ஊழியர் சங்கத்தின் உப அமைப்பாளர் ஆனந்த பாலித்த இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை துரிதமாக குறைவடைந்துள்ளது. விலைச்சூத்திரம் நடைமுறையில் இருந்திருந்தால்,...
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறைப்பாடுகளை வழங்க வேண்டுமென கோரியுள்ள வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸ், அவ்வாறு முறைப்பாடுகளை வழங்கினால் உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க தயார் என்றும் அறிவித்துள்ளார். ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று மாலை ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இதன் போது பல்கலைக்கழக பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள்...
விடுவிக்கப்பட்ட காணிகளை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த அறிவிப்பை பிரதேச செயலாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் அவர் கூறியுள்ளார். ஆளுநர் செயலகத்தில், நேற்றையதினம் பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்டத்திலுள்ள மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு,...
முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், அங்கு காணியை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வந்தன. இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக தெரிவித்து, மனித நேய கண்ணிவெடி அகற்றும்...
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் கொள்கையில் எந்த வித்தியாசமும் இல்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உண்மையான, நேர்மையான தலைமைத்துவமாக தமது தலைமைத்துவம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தப் புதிய கூட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவது யாழ்ப்பாணம் பிரதேச செயலக அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அங்கிருந்த 17 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாயாரான சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அந்த சிறுமியின் கணவர் என தன்னை அறிமுகப்படுத்தியவரும் அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோயில் வீதியில்...
பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர், மாணவன் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பொருள்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் நேற்றையதினம்...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் நித்தியானந்தன் மாதவன், சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட கூகுள் கோட் இன் – 2019 ( Google Code-In 2019) போட்டியில் ஒரு பிரிவில் முதலிடத்தை (Grand Prize Winner பட்டம்) பெற்றுள்ளார். இவருக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில்...
இலங்கைக்கு அருகில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாதி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது. குறித்த நில நடுக்கம் இலங்கைக்கு தென் கிழக்காக இந்து சமுத்திரத்தில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில்...
தற்போது நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிகளச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது. அத்தோடு நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு பாடசாலை மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார அமைச்சு கல்வி அமைச்சிற்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த பிரச்சினைகளில்...
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் 3 க்கு புதிதாக 1090 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் 706 பேரையும், திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 384 பேரையும் ஆட்சேர்ப்பதற்காக இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்த (07) வெள்ளிக்கிழமை வெளிவந்த வர்த்தமானியில் இவ்விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத்...
வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான தொழிவாய்ப்பை பெற்றுக்கொள்ள அரசு தரும் வாய்ப்பை உரிய நேரத்தில் சரியான ஒழுங்கு முறையை பின்பற்றி பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளார் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தில் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் பெப்ரவரி மாதம் 20...
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைலையிலான கூட்டணியை, தம்முடன் வந்து இணைந்து செயலாற்றுமாறு மகிந்த ராஜபக்ச தரப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கடந்த ஞாயிறன்று புதிய அரசியல் கூட்டணியொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, பாலியல் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு...
குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் நீண்டகாலமாக வெலிக்கடையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் விசாரணை நடத்த குழு ஒன்றை நியமிப்பதாக தடுப்புக் காவலில் உள்ளவர்களிடம் ஜனாதிபதி உறுதியளித்தார். இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேற்று (10) மாலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர்...
தொழில்வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தில் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லை 45 ஆக அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் இம் மாதம் 14 ஆம்...
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மற்றும் அச்சம் காரணமாக நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் 170 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எனினும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை என தொற்று நோயியல் பிரிவின் பிரதான வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பாக...
Loading posts...
All posts loaded
No more posts
