அதிகரிக்கும் நெருக்கடிகள் – நாட்டை முழுமையாக முடக்கத் தயாராகின்றது அரசாங்கம்?

சில நாட்களேனும் நாட்டை முழுமையாக முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி கொழும்பினை தலைமையகமாக கொண்ட தமிழ் ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன், மின் வெட்டினை வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது....

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல்!!

நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இருவருக்கு நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு செல்ல தவறியமையால் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த சென்ற கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்ய...
Ad Widget

அடுத்த வாரம் முதல் பணிப்புறக்கணிப்பு – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்

எரிபொருள் சேவை விநியோக கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் நிலைமைக்கு அரசாங்கம் இவ்வார காலத்திற்குள் தீர்வு பெற்றுக்கொடுக்காவிடின் எதிர்வரும் வாரம் முதல் நாடுதழுவிய ரீதியில் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம். எரிபொருள் பற்றாக்குறை என தொடர்ந்து எம்மால் புலம்பிக்கொண்டிருக்க முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார். மருதானை சனசமூக...

டீசல் கையிருப்பில் இல்லை எனவே வரிசையில் நிற்க வேண்டாம் என அறிவிப்பு!

டீசலினை பெற்றுக்கொள்வதற்காக இன்றும்(புதன்கிழமை) நாளையும் வரிசைகளில் நிற்க வேண்டாமென பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். 37,500 மெட்ரிக் தொன் டீசலை கொண்டுவந்த கப்பலிலிருந்து திட்டமிட்டபடி டீசலை இறக்க முடியாமல்போன காரணத்தினால் டீசலை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு...

மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது எரிவாயுவின் விலை – உறுதிப்படுத்தினார் இராஜாங்க அமைச்சர்!

எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் 4ஆம், 5ஆம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்....

நாட்டின் சில பகுதிகளில் இன்று தொடர்ச்சியாக 10 மணிநேர மின்வெட்டு!

நாட்டில் இன்றும்(புதன்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் இன்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை 6 மணித்தியாலங்களும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை 4 மணித்தியாலங்களும், இரவு 10 மணிமுதல்...

கோப்பாய் பகுதியில் வாள்வெட்டு – இரு இளைஞர்கள் படுகாயம்!

கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்களின் வீட்டினுள் இருந்து 3 வாள்களை மீட்டுள்ள கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை இரவு புகுந்த...

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை, எனவே அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்கிறார் மஹிந்த!

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை....

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் 5,000 ரூபாய்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை...

மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது!

தற்போதைய நிலையில் மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை அறிவித்துள்ளார். மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் திறந்து வைப்பு!

இலங்கை - இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் 01.00 மணியளவில் காணொளி முறையில் எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பில் இடம்பெற்ற...

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசு வங்குரோத்து அடையவில்லை என்கிறது ஆளும் தரப்பு!

ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசாங்கம் வங்குரோத்து அடையவில்லை என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பஷில் ராஜபக்சவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கினார். அந்த கட்சிதான் இலங்கையில் இன்று பலம் வாய்ந்த கட்சி...

தமிழ்மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை வழங்கினால் நாட்டின் பொருளாதாரத்தை புலம்பெயர்மக்கள் மீட்பார்கள்!!

ஆட்சியாளர்களும் தென்னிலங்கை அரசியல் வாதிகளும் இனவாதத்தை கைவிட்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்குவார்கள் என்றால் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என யாழ் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும்...

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது!

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , பொலிஸ் உத்தியோகஸ்தரின் கோண்டாவில் வீட்டினுள் நேற்று (27) மாலை 10 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று புகுந்து...

நவக்கரி இளைஞர் இனந்தெரியாதோரால் கடத்தல்!

புத்தூர் மேற்கு, நவக்கரியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தூர் மேற்கு, நவகரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30 வயது இளைஞரே நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த...

புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயமல்ல: கஜேந்திரகுமார்

புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை என்பது, இலங்கை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் அல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர்...

முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் குறித்த பட்டியல் விரைவில்!

முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் நாட்களில் குறித்த பட்டியல் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரையில் 14.4 மில்லியன் மக்கள் முதல் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். எனினும் அவர்களில் 7.7 மில்லியன் மக்களே பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளதாக தொற்று நோய்...

ஜனாதிபதியை சந்தித்து பேசியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான குறித்த சந்திப்பு பகல் 1.30 மணி வரை நீடித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராசா, நாடாமன்ற உறுப்பினர்களான...

ருமேனிய எல்லையில் 16 இலங்கையர்கள் உள்ளடங்களாக 38 பேர் கைது!

ருமேனியாவில் இருந்து பாரவூர்தி ஒன்றில் ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பி செல்ல முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 15 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனியாவின் நட்லாக் 2 எல்லை பகுதியில் பாரவூர்தி ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அதில் மறைந்திருந்த 16 இலங்கையர்கள் உள்ளடங்களாக 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்ட சில மணி...
Loading posts...

All posts loaded

No more posts