- Tuesday
- June 16th, 2026
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கோட் எலிசெபத் வல்ஸ்ரோம், யாழ்ப்பாணத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்யவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் வருகைதந்துள்ள மார்கோட் வல்ஸ்ரோம், மங்கள சமரவீர, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரை நேற்றையதினம் சந்தித்தார். அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்...
இலங்கையிலுள்ள பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்காக மிகவும் பாதுகாப்பான மற்றும் துன்புறுத்தல்கள் அற்ற சூழலை உருவாக்குவதற்கான சட்டக்கொள்கையை தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய இந்த திட்டங்களை மிகவும் செயற்றிறனுடன் முன்னெடுப்பதற்கான அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றினூடாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்காக மிகவும் பாதுகாப்பான மற்றும் துன்புறுத்தல்கள் அற்ற சூழலை உருவாக்கும்...
பிரபாகரனால் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுவதாக, பிவிதுரு ஹெல உருமய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து சுயாதீன அரசாங்கமாக்குவது தமிழீழம் மேலும் தலைதூக்குவதற்கான நடவடிக்கை என அவர் கூறியுள்ளார்....
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீள இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அவர் யாழ். மாவட்ட செயலகத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீள இயக்குவது குறித்து அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, ரிசாட் பதியுதீன் இவ்வாறு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் சந்தேகநபர்களை தொடர்ந்தும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, சட்டமா அதிபர் முன்வைத்துள்ள வேண்டுகோள் குறித்து எழுத்துமூல வாதங்களை முன்வைக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் தற்போது சுமார் ஒரு வருட காலமாக காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு...
மலையாளத்தில் ‘அவருடே ராவுகள்’ என்ற படத்தை தயாரித்தவர் அஜய் கிருஷ்ணன்(வயது 29). இந்த படத்தில் ஆசிப் அலி, உன்னி முகுந்தன், ஹனிரோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷானில் இயக்கி இருந்தார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு முன்பு முதல் காப்பியை தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணன் ‘பிரிவியூ’ தியேட்டரில் போட்டு பார்த்து அதிர்ச்சியடைந்தார்....
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே... என அந்த சின்னப் பையன் பாடியபோது, பிற்காலத்தில் நாம் அவன் படத்துக்கே இசையமைக்கப் போகிறோம் என்று கொஞ்சமும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான். இன்று அது நடந்துவிட்டது. அன்று சின்னப் பையனாக அந்தப் பாடலைப் பாடியவர் ஜிவி பிரகாஷ். ரஹ்மானின் சொந்த அக்கா பையன்....
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, இருதய நோய் சிகிச்சை பிரிவில் இன்று திங்கட்கிழமை (25) சிகிச்சை பெற்றார். முதலமைச்சருக்கு இருதய நோய் இருப்பதன் காரணமாக அவர் கடந்த காலங்களிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், இன்றும் சிகிச்சை பெறுகின்றார். அவர் விடுதியில் அனுமதிக்கப்படவில்லையெனவும், சிகிச்சை மாத்திரம்...
புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய, தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான ராம் என்பவர், பயங்கரவாதப் புலனாய்வுப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது கணவன், திருக்கோவில் - தம்பிலுவில் பிரதேசத்திலுள்ள தமது வீட்டிலிருந்து, இனந்தெரியாதோரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையிலேயே பொலிஸாரினால் இந்தத்...
மாகாண சபை ஒன்றில் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் பிரேரணைகளை நிறைவேற்றுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. இதனைத் தெரிந்தும் வடமாகாணசபையை ஆளும் அரசியல்வாதிகள் இவ்வாறு பிரேரணைகணை நிறைவேற்றுவது வியப்பளிக்கிறது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை அமைக்கவேண்டுமென வட மாகாணசபையின் பிரேரணைகளை நிறைவேற்றும் போது நாட்டு...
முல்லைத்தீவு மல்லாவியில் வடக்கு விவசாய அமைச்சால் விவசாயிகளுக்கு சிறுபோகத்துக்கான விதைகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (23.04.2016) நடைபெற்றுள்ளது. மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான விதைகளை வழங்கிவைத்துள்ளார். வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து முல்லை...
இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத ஒரு வேடத்தில், ‘தொடரி’ படத்தில் தனுஷ் நடித்து இருக்கிறாராம். டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் ரெயிலில் நடக்கும் சம்பவங்களே ‘தொடரி’ படத்தின் கதை. 2 இரவுகள், ஒரு பகலில் சம்பவங்கள் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது!
கடும் வெயிலில் அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் ‘மேக்கப்’ போட்டு நடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடை வெயில் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களையும் வறுத்து எடுக்கிறது. மக்களால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. ரோடுகளில் அனல் வீசுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். நடிகர்-நடிகைகளும் படப்பிடிப்புகளில்...
வடமாகாணத்தில் குற்றச்செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அவசர கடிதம் ஒன்றை வடக்கு முதல்வர் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் களவுகள், கொள்ளைகள், நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடமாகாணத்திற்கு சுற்றுலா வந்த சிங்கள மக்களின் பேரூந்து மீது தாக்குதல்...
வட மாகாணத்திலுள்ள மூன்று முக்கிய தொழற்சாலைகளை மீண்டும் இயங்கவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது குறித்த முக்கிய பேச்சுவார்த்தையொன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயண தொழிற்சாலை மற்றும் ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றை மீள இயங்கவைப்பது தொடர்பாகவே இப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. யாழ்...
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம், வான் ஒன்றில் வந்தவர்களால், நேற்று காலையில் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். திருக்கோவில் தம்பிலுவில் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்தே நேற்று காலை ராம், இனந்தெரியாதவர்களினால் வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி...
இலங்கையில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களை உள்ளடக்கி, முஸ்லிம் மக்களுக்கான தனி நிர்வாக மாவட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரியுள்ளது. அப்படியான ஒரு நிர்வாக மாவட்டம் தற்போது நாட்டில் இருக்கும் 25 நிர்வாக மாவட்டங்களுக்கு அப்பாற்பட்டு 26-ஆவதாகவோ அல்லது தென்கிழக்கு கரையோரம் தனியான நிர்வாக மாவட்டமாகவோ...
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பரவிபாஞ்சானில் உள்ள இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 16ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றை அடுத்து, அவர்கள் குறித்த முகாமிற்குள் பிரவேசித்ததாக...
வரலாற்று பிரசித்தி வாய்ந்த புத்தூர், நிலாவரை கிணற்றில் பாய்ந்ததால், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த முதியவர், ஞாயிற்றுக்கிழமை (24) கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டார். சரவணமுத்து தேவதாசன் (வயது 75) என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை (23) பிற்பகல், நிலாவரை கிணற்றில் குதித்த முதியவர், காணாமல் போயிருந்த நிலையில், அவரை தேடும் பணியில் இராணுவத்தினர்...
வவுனியா குட் ஷெட் பகுதியிலிருந்து, கைக்குண்டொன்றும் அதன் அருகிலேயே பிரபல தமிழ் அரசியல்வாதியொருவரின் தேசிய அடையாள அட்டையொன்றும் மீட்கப்பட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையத்தே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் கைக்குண்டு தணிக்கைச் செய்யும் விசேட அதிரடிப்படையினர் மூலம் குண்டு செயலிழக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Loading posts...
All posts loaded
No more posts
