Ad Widget

8 பேர் நேற்று விடுதலை

release_allபயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட 8 பேர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டு கொழும்பில் வசித்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் பளையில், தமிழீழத்தின் காவலர்கள் என்ற துண்டு பிரசுரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக வடக்கு மற்றும் தலை நகரிலும் தமிழர்கள் 65 பேர் வரையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவரைத் தேடுவதாகவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி பதவியா காட்டுப் பகுதியில், பயங்கரவாத தடுப்புப் பிரிவால் தேடப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் என்று இலங்கை அரசால் சொல்லப்பட்ட கோபி, தேவியன், அப்பன் ஆகியோர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டு தொழில் நிமித்தம் தெஹிவளையில் தங்கியிருந்த 12 தமிழர்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரில், ஒரு பெண் உள்ளிட்ட 8 பேர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பூஸா தடுப்பு முகாமிலிருந்து, கொழும்பு இரண்டாம் மாடிக்கு கொண்டு வரப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts