Ad Widget

8ஆம் திகதி வரை நாளாந்தம் ஆறரை மணிநேரம் மின்வெட்டு!

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாளாந்தம் ஆறரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறரை மணிநேர மின்வெட்டு தொடர்பாக இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

இதன்படி A முதல் L வரையான வலயங்களில் முற்பகல் 8 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையில் சுழற்சி முறையில் 4 மணிநேரம் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் பிற்பகல் 5 மணிமுதல் இரவு 10 மணிவரை இரண்டரை மணிநேரமும் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் P முதல் W வரையான வலயங்களில் முற்பகல் 10 மணிமுதல் மாலை 6 மணிவரையில் 4 மணிநேரமும் மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணிநேரமும் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் C.C.1 வலயத்தில் காலை 6 மணிமுதல் இரவு 9.30 வரையான மூன்றைரை மணிநேரத்திற்கு மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts