Ad Widget

740 இந்துக் கோயில்களை புனரமைக்க 750 லட்சம் ரூபா; நாடு முழுவதுக்குமான ஒதுக்கீடு

இந்துக் கோவில்களின் அபிவிருத்தி பணிகளுக்காக நிதி வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்துக் கோவில்களின் பிரதிநிதிகளிடம் நிதியை கையளித்தார்.

இந்த வருடம் நாடு முழுவதிலும் உள்ள 740 இந்துக் கோயில்களைப் புனரமைப்பதற்கு 750 லட்சம் ரூபா நிதி புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சால் ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 73 கோயில்கள் புனரமைப்பதற்கு 82 லட்சம் ரூபாவும், கிளிநொச்சியில் 53 கோயில்கள் புனரமைப்பதற்கு 53 லட்சம் ரூபாவும், முல்லைத்தீவில் 78 கோயில்கள் புனரமைப்பதற்கு 78 லட்சம் ரூபாவும், மன்னாரில் 56 கோயில்கள் புனரமைப்பதற்கு 56 லட்சம் ரூபாவும், வவுனியாவில் 8 கோயில்கள் புனரமைப்பதற்கு 8 லட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

திருகோணமலையில் 33 கோயில்கள் புனரமைப்பதற்கு 34 லட்சம் ரூபாவும், மட்டக்களப்பில் 114 கோயில்கள் புனரமைப்பதற்கு 114 லட்சம் ரூபாவும், அம்பாறையில் 101 கோயில்கள் புனரமைப்பதற்கு 101 லட்சம் ரூபாவும், அனுராதபுரத்தில் 7 கோயில்கள் புனரமைப்பதற்கு 11 லட்சம் ரூபாவும், பதுளையில் 37 கோயில்கள் புனரமைப்பதற்கு 37 லட்சம் ரூபாவும், கொழும்பில் 4 கோயில்கள் புனரமைப்பதற்கு 4 லட்சம் ரூபாவும், களுத்துறையில் 6 கோயில்கள் புனரமைப்பதற்கு 6 லட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கண்டியில் 47 கோயில்கள் புனரமைப்பதற்கு 47 லட்சம் ரூபாவும், கேகாலையில் 25 கோயில்கள் புனரமைப்பதற்கு 25 லட்சம் ரூபாவும், குருநாகலில் ஓர் ஆலயத்துக்கு ஒரு லட்சம் ரூபாவும், மாத்தளையில் 8 கோயில்கள் புனரமைப்பதற்கு 8 லட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் 6 கோயில்கள் புனரமைப்பதற்கு 6 லட்சம் ரூபாவும், மொனராகலையில் ஓர் ஆலயம் புனரமைப்பதற்கு ஒரு லட்சம் ரூபாவும், நுவரெலியாவில் 52 கோயில்கள் புனரமைப்பதற்கு 52 லட்சம் ரூபாவும், பொலன்னறுவையில் ஓர் ஆலயம் புனரமைப்பதற்கு ஒரு லட்சம் ரூபாவும், புத்தளத்தில் 4 கோயில்கள் புனரமைப்பதற்கு 4 லட்சம் ரூபாவும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதனைவிட 10 மில்லியன் ரூபா செலவில், கதிர்காமத்திலுள்ள யாத்திரிகர் விடுதி புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் புதிய 2 மாடி யாத்திரிகர் விடுதி அமைப்பதற்கும் அடிக்கல் நடப்பட்டுள்ளது.

Related Posts