Ad Widget

69 ஆவது அகவையில் ஜனாதிபதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது 69 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். அந்தவகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசிவேண்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

mahinda_rajapaksa

குறிப்பாக நாடளாவிய ரீதியில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் பல்வேறு சமய நிகழ்ச்சிகளுக்கு இன்றைய தினம் ஏற்பாடு செய்துள்ளனர்.

கொழும்பிலும் அனைத்து மதங்களினதும் சார்பாக பல சமய நிகழ்வுகள் இன்றைய தினம் இடமபெறுகின்றன. அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லாசி வேண்டி பிரார்த்தனைகளில் ஈடுபடவுள்ளனர்.

1945 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் பிறந்த ஜனாதிபதி மஹிந்த ராசஜபக்ஷ தனது 24 ஆவது வயதில் இலங்கையின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையுடன் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் கடந்த 2005 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்திலும் இன்றைய தினம் பல ஆலயங்களில் சிறப்பு பூசைகளும் அன்னாதானங்களும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts