பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.
பண்டத்தரிப்பு சாந்தையைச் சேர்ந்த சின்னத்தம்பி கிறேசியன் (வயது 6) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
வீட்டுக்கு அண்மையில் உள்ள முன்பள்ளியில் கற்றுவரும் இவன் வழமை போல் நேற்றும் சென்றுள்ளான். 11 மணிக்கு முன்பள்ளி முடிந்த திரும்பி வரும் இவன் நேரடிமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தநிலையில் பிற்பகல் 3.45 மணியளவில் வீட்டுக்கும் முன்பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் சிறுவன் இறந்த நிலையில் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
சடலம் பொலிஸாரல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
சிறுவன் இறந்த நிலையில் காணப்பட்ட கிணற்றில் மீன்கள் இருப்பதால் அதைப் பார்வையிடச் சென்ற அவன் தவறிவிழுந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.