500 வீதி விளக்குகளை பொருத்தியுள்ளோம்: சுகிர்தன்

sugirthan_tellippalaiவலி. வடக்கு தெல்லிப்பழை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதான வீதிகளுக்கு கடந்த 2 வருடங்களில் 500 இற்கும் மேற்பட்ட வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

சபையின் நிதியிலிருந்து வீதி விளக்குகள் கட்டம் கட்டமாக பிரதான வீதிகள் உட்பட மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளுக்கும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த வருடம் 350 வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் இதுவரையில் 250 வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Recommended For You

About the Author: Editor