50 வருடங்களாக இருளில் வாழும் சிங்காவத்தை மக்கள்

Street_Lampதெல்லிப்பளை துர்க்காபுரம் பகுதியில் அமைந்துள்ள சிங்காவத்தை மக்கள் மின்சாரம் இன்றி சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தங்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்காவத்தைப் பகுதியில் தற்பேர்து சுமார் பதினைந்து குடும்பங்கள் வரை மின்சாரம் இன்றி வாழ்ந்து வருகின்றார்கள்.

போக்குவரத்து வசதி இன்மையை காரணம் காட்டி கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மின்சாரம் வழங்கப்படாமல் காணப்படுவதாக அம்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் இல்லாத கிராமங்களின் விபரங்களை பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக எடுக்கும் சந்தர்பங்களிலும் இக் கிராமம் ஒதுக்கப்படுவதாக அம் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எடுத்த முயற்சியைத் தொடர்ந்து இப்பிரதேசத்திற்கான போக்குவரத்து பாதை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் இனியேனும் இக்கிராமத்திற்கு மின்சார வசதியை பெற்றுகொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.