Ad Widget

5 ஆவது நாளாக தொடரும் குடும்பநல பணியாளர்களின் போராட்டம்

பிராந்திய சுகாதாரப் பணிமனையின் கீழ் பணி புரியும் குடும்பநல பணியாளர்களின் போராட்டம் இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

DSCF8996

குடும்பநல பணியாளர்கள் நிரந்தர நியமனம் கோரி கடந்த வியாழக்கிழமை (19) முதல் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலிரு தினங்களும் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையின் முன்னால் நடைபெற்ற இந்தப் போராட்டம், சனி, ஞாயிறு தினங்களில் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனை விடுமுறை ஆகையினால், தங்கள் தங்கள் பிராந்திய சுகாதார நிலையங்களின் முன்னால் குடும்பநல பணியாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்தனர்.

பல வருடங்களாக 6 ஆயிரம் ரூபா வேதனத்தில் கடமையாற்றி வரும் இந்த குடும்பநல பணியாளர்கள் தங்களின் நிரந்தர நியமனம் கோரியே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts