45 இலங்கை அகதிகள் நாடு திரும்பினர்

அகதிகளாக இந்தியாவில் பல பகுதிகளிலும் உள்ள முகாம்களில் குடியேறியிருந்த இலங்கையர்கள் 45 பேர், நேற்று செவ்வாய்க்கிழமை (28) சர்வதேச விமான நிலையத்தனூடாக இலங்கையை வந்தடைந்தனர்.

இதன் பிரகாரம் திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமாரி, விழுப்புரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, கரூர், திருநெல்வேலி, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 45 பேரும் முகாம்களின் அதிகாரிகளின் அனுமதியைப்பெற்றுக்கொண்டு சொந்த அவர்களது சொந்த நாடான இலங்கைக்கு நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாட்டுக்கு வந்த அகதிகளில் மீது எந்தவொரு பொலிஸ் முறைப்பாடும் பதிவாகியில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடந்த மே மாதம் 41 இலங்கை அகதிகள் இலங்கைக்கு நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts