40 கிலோ வெடிப்பொருட்கள், ஆட்லெறி மீட்பு!

Sl_police_flagயாழ்ப்பாணம் நாச்சிக்குடாவில் 40 கிலோகிராம் வெடிப்பொருட்களும் மனியந்தோட்டத்தில் ஆட்லெறி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

40 கிலோகிராம் வெடிப்பொருட்கள் சட்டவிரோதமான மீன்பிடிக்கு பயன்படுத்துவதற்காக வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த வீட்டிலிருந்த இருவரும் கடல்வழியாக தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆட்லெறியை செயலிழப்பதற்கு இராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.