Ad Widget

4 ஆம் மாடிக்கு வருமாறு இராசகுமாரனுக்கு அழைப்பு

jaffna-universityயாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். இராசகுமாரனை கொழும்பு – பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு தலைமையகமான 4ஆம் மாடிக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் நேற்று இரவே கொழும்பு புறப்பட்டுச் சென்றுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெருங்கிய நிலையில் 5 நாட்கள் திடீரென மூடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கைலைக்கழகம் இன்று கல்விச் செயற்பாடுகளுக்காகத் திறக்கப்படுகிறது.

இந்நிலையில் முள்ளிவாய்க்காலில் பலியான மக்களுக்கு இன்று பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் சங்கத்தினரும் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததனர் எனவும் தெரியவருகிறது.

இந்நிலையிலேயே யாழ்.இராணுவ சிவில் தலைமைக் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்ட இராசகுமாரன் தலைமையிலான ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை படையதிகாரிகள் சந்தித்து அஞ்சலி நிகழ்வுகள் எதனையும் நடத்த வேண்டாமென கடும் தொனியில் அறிவுறுத்தியுள்ளனர்.

சந்திப்பு இடம்பெற்ற சில மணி நேரங்களிலேயே 4 ஆம் மாடிக்கு வருமாறு அவர் அழைக்க்ப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்குள் விசாரணைக்கு வர வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டிருந்தது.

விசாரணைக்கு வராவிட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளாராம். இதனையடுத்து ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன் நேற்று மாலையே கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

நினைவேந்தலை கைவிடுங்கள்! நிகழ்ந்தால் இராணுவம் தலையிடும்!- யாழ். இராணுவத்தளபதி

Related Posts