4 மாதங்களை அதிகரித்தது ஆட்பதிவுத் திணைக்களம்

nic-srilanka12 மாதங்களை கொண்டதே ஒரு வருடமாகும் எனினும் 16 ஆவது மாதம் என குறிப்பிட்டு இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தினால் தேசிய அடையாள அட்டையொன்று வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தினால் 2012 ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அடையாள அட்டை வழங்கப்பட்ட திகதி குறிப்பிடப்படும் அட்டையின் முன்புறத்தில் 2012.16.17 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 16 ஆம் மாதம் என குறிப்பிடப்பட்டுள்ளமையானது இந்நபரின் பல செயற்பாடுகளில் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.

Related Posts