Ad Widget

4வது முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி!!

கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் அர்ஜெர்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.

1-argentina-lionel-messi

ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தை வேகப்படுத்திய ஜெர்மனி, அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி கொடுத்தது.

இதனால் 90 நிமிட முடிவிலும் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்ட நடுவர் கூடுதல் நேரம் வழங்கினார்.

முதல் பாதி கூடுதல் நேரத்திலும் அர்ஜென்டினா – ஜெர்மனி அணிகள் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்தன. இதனையடுத்து இரண்டாம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

ஆட்ட முடிவுக்கு 8 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், 113-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மரியோ கோட்சே ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல்கணக்கில் வென்று 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி.

2-fifa-world-cup-2014-final-germany-wins-fourth-championship

இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி 4 வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதில் 3 முறை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து போட்டிகளைப் போலவே மிகவும் எதிர்பார்க்கப்பட்டதுதான் தங்க பந்து, தங்க கையுறு, தங்க காலணி யாருக்கு என்பதும். இதற்காக அர்ஜென்டினாவில் இருந்து ஏஞ்சல் டி மரியா, சேவியர் மாஸ்கரனோ, லியோனல் மெஸ்சி ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஜெர்மனியின் தாமஸ் முல்லர், டோனி குரூஸ், மேட்ஸ் ஹூம்மல்ஸ், பிலிப் லாம் ஆகியோரும் தங்க பந்து பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். பிரேசிலின் நெய்மர், நெதர்லாந்தின் ரோபன், கொலம்பியாவின் ஜேம்ஸ் பெயரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

3-lionel-messi-wins-golden-ball

இவர்களில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு தங்க பந்து கிடைத்துள்ளது.

germany-goalkeeper-manuel-neuer-golden-glove-trophy-600

இதேபோல் சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை ஜெர்மனியின் மனுவேல் நெயுருக்கு கிடைத்தது.

-james-rodriguez

இதேபோல் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸூக்கு தங்க காலணி கிடைத்தது.

Related Posts