30 பவுண் நகை மோசடி; பெண் தலைமறைவு

Gold-nagai-juwale30 பவுண் நகையினை மோசடி செய்துவிட்டு பெண்ணொருவர் தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழ். குருநகர் பகுதியில் வாழும் பெண்ணொருவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் அதே இடத்தில் உள்ள பெண் ஒருவரிடம் சொந்த தேவைக்காக 30 பவுண் இற்கும் மேற்பட்ட நகைகளை பெற்று மீளத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

நகைகளை கொடுத்த பெண், இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் நகையினை பெற்றுக் கொண்ட பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து யாழ். பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 15ஆம் திகதி சில நகைகளை கையளிப்பதாகவும் ஏனைய நகைகளை தவணை முறையில் செலுத்துவதாக விசாரணையின் போது அந்த பெண் கூறியுள்ளார்.

எனினும், நிர்ணயிக்கப்பட்ட திகதியில், நகைகளை செலுத்தாது குறித்த பெண் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட பெண் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

அதனையடுத்து, நகைகளை மோசடி செய்த பெண்ணின் கணவனை யாழ். பொலிஸார் நேற்றைய தினமே கைதுசெய்து விசாரணை மேற்கொண்டபோது, மனைவி அவுஸ்திரேலியாவிற்கு செல்ல தலைமறைவாகிவிட்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor