28 ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

holiday-newyearசிவராத்திரி தினத்திற்கு மறுநாளான 28ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி அத்தினத்திற்கு பதிலாக மார்ச் 8 ஆம் திகதியை பாடசாலை தினமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

சிவராத்திரிக்கு மறுநாளான 28ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு இந்து ஆலய பாதுகாப்பு பேரவை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ஊடாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.