Ad Widget

250,000 ‘ட்விட்டர்’ சமூக வலைத்தள பயனாளர்களின் தகவல்கள் திருட்டு

twitterசமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் தளத்துக்குள் ஊடுருவி சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் பற்றிய தகவல்களை ஹக்கர்ஸ் கும்பலொன்று திருடிச் சென்றுள்ளதாக என்று அத்தளம் அறிவித்துள்ளது

இச்சம்பவத்தை அடுத்து ‘களவு’ கொடுத்த பயனாளர்கள் அனைவரையும் புதிய கணக்கு தொடங்கிக் கொள்ளுமாறு ட்விட்டர் தளம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

ட்விட்டர் சமூக வலைதளம் அவ்வப்போது ஹேக்கர்ஸின் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. கடந்த வாரமும், இவ்வாறானதொரு ஹக்கர்ஸ் கும்பல் தாக்குதல் நடத்த முனைந்ததை அடுத்து அத்தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

இருப்பினும், சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் பற்றிய தகவல்களை மேற்படி ஹக்கர்ஸ் கும்பல் திருடிக் கொண்டு போயிருப்பதும் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஊடகம் மற்றும் தொழில்நுட்பத்துறை மீதான பெரும் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலையில், அமெரிக்க கணினிகளை ஊடுருவி தகவல்களைத் திருடுவதில் சீனர்கள்தான் அதிகம் ஈடுபடுவதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts