Ad Widget

25 வருடங்களின் பின்னர் பருத்தித்துறை – மூளாய் பேருந்து சேவை

கடந்த 25 வருடங்களாக இடம்பெறாமல் இருந்த பருத்தித்துறையிலிருந்து சுன்னாகம், தெல்லிப்பழை, அளவெட்டி ஊடாக மூளாய் வரையிலான பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளர் க.கந்தசாமி, வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மத்திய அரசாங்கத்தால் எமது சாலைக்கு 6 பேருந்துகள் அண்மையில் வழங்கப்பட்டன. பருத்தித்துறை – திருகோணமலை பேருந்து சேவையில் காலை 8 மணிக்கு ஒரு சேவையை மேலதிகமாக மேற்கொள்ளவுள்ளோம்.

பேருந்து இல்லாமையால் சேவைகள் இடம்பெறாமல் இருந்த பகுதிகளுக்கான சேவைகளையும் ஆரம்பிப்பதற்கான நேர அட்டவணைகளைத் தயாரித்து வருகின்றோம். ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக அவற்றை உடனடியாக ஆரம்பிக்க முடியாமல் இருக்கின்றது.

எமது சாலைக்குத் தேவையான சாரதி மற்றும் நடத்துநர்களை எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுத்தருவதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எமக்கு கூறியுள்ளார். ஆளணியினர் கிடைத்ததும் பருத்தித்துறை – மூளாய் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என்றார்.

Related Posts