23 வருடங்களின் பின்னர் மயிலிட்டியில் வழிபாடு

இருபத்தி மூன்று வருடங்களுக்கு பின்னர் மயிலிட்டிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை தங்கள் சொந்த இடத்திற்குச் சென்று அங்குள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் மயிலிட்டிக்கு அப்பகுதி மக்கள் சென்றுள்ளனர்.

மயிலிட்டி பகுதியிலுள்ள வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்மன், முனையன் வளவு முருகன், மருதடி விநாயகர் ஆகிய ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக மாவிட்டபுரத்திலிருந்து தனியார் பேரூந்துகளில் மக்கள் வருகை தந்தனர்.

இவர்களை 12.30 மணியளவில் மாவிட்டபுரத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மயிலிட்டிப் பகுதிக்குச் அழைத்துச் சென்றார்.

மேற்படி மூன்று ஆலயங்களிலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் பொங்கல் மற்றும் அன்னதான நிகழ்வுகளை முன்னெடுத்ததுடன் சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

‘இதுவொரு முதற்கட்ட முயற்சியாகும். எதிர்காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி குறித்த பகுதியை மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பும், ஒத்தாசையும் வழங்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

maylity4

maylity7