- Wednesday
- November 25th, 2026
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வௌிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) நிராகரித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிற்கு அமைய, தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி...
ராஜாங்கனே சத்தாரத்ன தேரருக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) பிடியாணை பிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களில் மத நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் (RPTA) நிலவும் வெற்றிடங்களுக்காக, தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வெற்றிட விபரங்கள் பேருந்து நிலைய பொறுப்பதிகாரி (OIC - Bus Stand): 2 வெற்றிடங்கள் திடீர் பரிசோதனை உத்தியோகத்தர் (Flying Squad Officer): 8 வெற்றிடங்கள் முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant): 6 வெற்றிடங்கள் முக்கிய தகைமைகள் மற்றும்...
மாவீரர் நினைவேந்தல்களைத் தடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது – செல்வராசா கஜேந்திரன்
பேரினவாத அரசு எம்மை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என கொண்டு வந்து எங்கள் மாவீரர்களின் அஞ்சலிகளை செலுத்த விடாமல் தடுத்து கொண்டே வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (24) இடம் பெற்ற...
கொலம்பியாவின் கரிபியன் கடற்கரைச் சுற்றுலா நகரமான கர்டஜினாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள் புகுந்த ஆயுதமேந்திய தாக்குதல்தாரிகள் 25 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து விசேட அதிரடிப் படையினர், துப்பாக்கிச் சூட்டுக் குழுவினர் , இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து பாரிய பாதுகாப்பு நடவடிக்கையை...
கிரிக்கெட் அரங்கில் இளம் திறமையாளரான இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி மேலும் பல சாதனைகளை முறியடித்துள்ளார். இம்முறை அவர் ஆடவர்க்கான’லிஸ்ட் ஏ’ (List A) கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதம் மற்றும் இருசதம் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார். ஆசியக் கிண்ண ‘ரைசிங் ஸ்டார்ஸ்’ 50 ஓவர் தொடரில், ஐக்கிய அரபு எமீரகத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா...
75-ஆவது சர்வதேசப் பிரபஞ்ச அழகிப் போட்டியில், மெக்சிகோவின் பாத்திமா போஷைத் தொடர்ந்து, புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ 2026-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக (Miss Universe 2026) மகுடம் சூடியுள்ளார். 116 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் இப்பட்டத்திற்காகப் போட்டியிட்ட நிலையில், புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரில் நேற்று ( 24) நடைபெற்ற...
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது நாட்டைவிட்டு வெளியேறி, இந்தோனேசியாவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள், தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு தம்மை அங்கிருந்து மீட்பதற்கு உதவுமாறு உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணம், மேடன் (Medan) பகுதியில்...
வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி...
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (25) முழுப் பல்கலைக்கழகக் கட்டமைப்பிலும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது. வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மத்தியில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடத்தப்படவுள்ளதாக அக்குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார். இன்றைய தினமும் பல்கலைக்கழகங்களில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துடன்...
இலங்கையில் அமைதி மற்றும் நெருக்கடிகளைத் தடுப்பதற்கான 'சமூக உரையாடல்' (Social Dialogue) திட்டத்தின் ஊடாக, ஊழியர்கள் மற்றும் சமூகத்தினர் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கும், தமது வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் தீர்மானங்களை வடிவமைப்பதில் பங்களிப்பதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, தெற்காசியாவில் அரச துறை...
கூரை மீது சூரிய மின்சக்திப் படலங்களை பொருத்தும் திட்டத்தை முடக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் காரணமாக, அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என எரிசக்தித் திட்டமிடலாளர் அசோக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். சூரிய மின்சக்தி தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரமும் தற்போது காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய நடைமுறையில் உள்ள...
யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு 2003 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் முன்னணி தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் அபிவிருத்தி நிறுவனமான Speed IT Net, தனது வணிக நடவடிக்கைகளையும் வாடிக்கையாளர் வலையமைப்பையும் விரிவுபடுத்தும் நோக்கில், துடிப்பான மற்றும் அனுபவம் வாய்ந்த வணிக அபிவிருத்தி முகாமையாளர் (Business Development Manager) ஒருவரைப் பணியமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது....
