- Wednesday
- November 4th, 2026
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று (04.11.2026) காலை இடம்பெற்றுள்ளது. ஊர்காவற்றுறை திசையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகப் பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த தொலைத்தொடர்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மோதிய...
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் 30 வருடகாலமாகத் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, எதிர்வரும் 2026 நவம்பர் 9ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் சுகவீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மத்திய மற்றும் மாகாண அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய...
சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று (03) உத்தரவிட்டது. இருப்பினும், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பிற சட்ட நடவடிக்கைகளில் அவருக்குப் பிணை கிடைக்காததால், அவர் தொடர்ந்து விளக்கமறியலில் இருப்பார். அதேநேரம்,...
ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் நிகழ்நேர கோடீஸ்வரர்கள் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8 பில்லியன் டொலர் அல்லது 10.02 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவரது மொத்த சொத்து மதிப்பு 88.3 பில்லியன் டொலராக உயர்ந்ததைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார். ஜியோ...
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) நாராஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நேற்று முன்தினம் (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து ஒருநாள் சேவைகளையும் முன் பதிவுகளை (Appointments) மேற்கொள்வதன் ஊடாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு...
2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டுவருவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர, ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள தமது எல்.பி.ஜி முனையத்தை உள்நாட்டுச் சந்தைக்கு எரிவாயு விநியோகிப்பதற்காகப் பயன்படுத்துவதற்குரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய எரிவாயு விநியோகத் தடைகள்...
ஸ்பெயினில் உள்ள எஸ்டாடியோ ஹெலியோடோரோ ரோட்ரிக்ஸ் லோபஸ் மைதானத்தில் டெனெரிப் மற்றும் எஃப்சி அண்டோரா அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாகச் சென்ற இந்தப் போட்டியின் ஆட்ட நேர இறுதிப் பகுதியில், இரு அணிகளும் 2 - 2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. அப்பொழுது நீண்ட தூரப் பந்தைக் கைப்பற்ற ஜீசஸ் டி...
புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு இணையாக, பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிப்பது தொடர்பாகக் கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் இச்சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் தொடங்கப்பட்டுள்ளதுடன், 2027 ஆம் ஆண்டில் 2 ஆம் மற்றும் 6 ஆம்...
அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தலான செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளுக்கான போட்டியில் ஜனநாயக கட்சி முன்னிலை வகித்து வருகின்றது. அமெரிக்காவில் நடைபெறும் பாராளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. உலக வல்லரசான அமெரிக்காவின் பாராளுமன்ற அதிகாரம் யாருக்குப் போகிறது என்பதை நிர்ணயிக்கும் இவ் இடைத்தேர்தலில், செனட் (Senate) மற்றும் பிரதிநிதிகள் சபை (House of...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நேற்று திடீரென மீண்டும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், அவருக்கு சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது....
2026 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88% ஆல் திருத்துமாறு நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் (NSO), யோசனை முன்வைத்துள்ளது. எனினும் 1.46 சதவீத அதிகரிப்பை மட்டுமே இந்த காலப்பகுதியில் அமுல்படுத்துவதற்கான பரிந்துரையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. எவ்வாறாயினும், நாளை (5) நடைபெறவுள்ள பொதுமக்களின் கருத்துக்கேற்பு கூட்டத்தின் பின்னரே, இறுதித்...
