திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள்

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏற்கனவே விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த விமான சேவையானது இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து...

இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில், ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தற்போது சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் மற்றும் கடற்போக்குவரத்துத் தடைகள் காரணமாக இக்கப்பல்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதோடு, சில கப்பல்களில் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சீனாவுக்கு கச்சா...
Ad Widget

தமிழக முதல்வர் விஜய்க்கு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு!

தமிழகம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின்போது, தமிழகத்தில் நிலவும் நிர்வாகச் சூழல் மற்றும் தவெக தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது. கோவையைச் சேர்ந்த மோசடி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஒன்று கடந்த புதன்கிழமை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா ஆகியோர்...

அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்

எதிர்வரும் ஆண்டு முதல் நாட்டின் வரி முறைமையை மேலும் எளிமையாகவும் இலகுவாகவும் மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிசாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய, சுங்க வரிக்கு மேலதிகமாக அறவிடப்படும் ஏனைய வரிகளை நீக்கி, படிப்படியாக வரிகளை எளிமைப்படுத்துவதற்குத் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், ஏனைய நிறுவனங்கள் தொடர்பிலும் இத்தகைய எளிய வரி நடைமுறைகளே பின்பற்றப்படும்...