- Wednesday
- September 16th, 2026
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜயநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு கோட்டை நீதிவான்...
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, லண்டனில் நடைபெறவிருந்த தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் நிகழ்ச்சி ஒன்று செவ்வாய்க்கிழமை (15) இரத்து செய்யப்பட்டது. இந்த இரத்து நடவடிக்கையால், பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் உட்படப் பல ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். நிகழ்வுக்காக செவ்வாய்க்கிழமையன்று லண்டனின் மிக உயரமான கட்டிடமான ‘தி ஷார்ட்’ (The Shard) முன்பாக அவரது ரசிகர்கள்...
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு பொலிஸ் மா அதிபரினால் உத்தரவிடப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த செப்டம்பர் 12...
இலங்கையின் அரசப் பல்கலைக்கழக அமைப்பில் நீடித்து வரும் கடுமையான பிரச்சினைகளுக்கு உடனடியாக முறையான தீர்வுகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த வாரத்தைக் ‘கறுப்பு வாரமாக’ பிரகடனப்படுத்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,...
தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தியாக தீபத்தின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதன் போது , நினைவிடத்தில் தியாக தீபத்தின் வெண்கல உருவ சிலை...
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு பரிசோதனை திட்டங்களின் மூலம் டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்கள் கண்டறியப்பட்டு வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (14) முதல் ஒரு வார காலத்திற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே...
பொலிஸ் சான்றளிப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக விண்ணப்பிக்கும் வாய்ப்பு விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணினி அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இணையவழி ஊடாக பொலிஸ் சான்றளிப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கணினி முறைமை சீரமைக்கப்படும் வரை, விண்ணப்பங்களைச்...
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றது....
இன்று (16) காலை 4.30 மணியளவில் களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி தாயும் அவரது உறவுக்கார மகளும் உயிரிழந்துள்ளனர். அனுராதபுரம் நோக்கி ரயிலில் பயணிப்பதற்காக, களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தின் வலது பக்கமாக நடைமேடைக்கு வருவதற்காக ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே இவர்கள் இருவரும் ரயிலில் மோதியுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...
