வலி வடக்கு காணி விடுவிப்பு – இம்மாத இறுதியில்!!

யாழ் வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகள் ஒரு தொகுதியினை இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடத்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி...

ETF, EPF நிதிகளை மத்திய வங்கியிடம் இருந்து பிரிப்பதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

ஆசியாவின் மிகப்பெரிய நிதியங்களில் முக்கிய இடத்தைப் வகிக்கும் இலங்கையின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதி ஆகியவற்றை இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கி, மூவர் கொண்ட குழுவிடம் ஒப்படைப்பதற்கு எதிராகச் சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக நேற்று புதன்கிழமை (02)...
Ad Widget

விடுதலைப் புலிகள் முகாம் புரளி பரப்பியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான முகாம் ஒன்று பளைப் பாதுகாப்புக் காட்டில் உள்ளதாகப் போலியான செய்தியைப் பரப்பியதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேகர, புதன்கிழமை (02) அன்று உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பில் மேலதிக...

பரீட்சை பெறுபேறு – பிள்ளைகளை துன்புறுத்தினால் சட்ட நடவடிக்கை!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் தண்டிப்பது அல்லது மனரீதியாகத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு அந்த அறிக்கை ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பரீட்சைப்...

மீன் விலை உயர்வுக்கு எல் நினோ காரணமா??

எல் நினோ (El Niño) தாக்கத்தின் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்கள், இலங்கையின் கடல் சூழலியல் அமைப்பு, மீன்வளம் மற்றும் மீன்பிடித் தொழில்துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை முன்கூட்டியே மதிப்பிடுவதற்காக, விரிவான தரவு பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய தொடர் ஆய்வுகளை தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (NARA) ஆரம்பித்துள்ளது. இந்த ஆய்வுப் பணிகள்,...

இலங்கை இலகு வெற்றி!! சமரி அத்தபத்து சாதனை!!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசிய மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (2) நடைபெற்ற போட்டியில் இந்தோனேசிய மகளிர் அணியை 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இலகுவான வெற்றியைப் பெற்றது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணி நிர்ணயித்த 125 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை...

யாழ் மாணவன் சாதனை!!

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்றுக் கொண்ட சுரேந்தர் சபின் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர், தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேநேரம் சிங்கள...

முதியோர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!!

2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ்...

எல்-நினோ தாக்கத்தினால் தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம்

எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் 4ஆவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இதன் போது...

ஓடும் ரயிலில் விளக்கேற்றி பூஜை; பயணி அதிரடி கைது!!

ஓடும் ரயிலின் ஏ.சி. பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த பயணி ஒருவரை ரயில்வே பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர். மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் கரீபா (வயது55). இவர் டெல்லியில் இருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்த 'ஹசரத் நிஜாமுதீன்-மைசூரு எக்ஸ்பிரஸ்' ரயிலின் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். ரயில்...