கனகராயன்குளத்தில் கப் ரக வாகனம் விபத்து!! இருவர் பலி!!

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்து இன்று (30) ஏ-9 வீதியின் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மாங்குளம்...

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் இன்று (30) காலை அரியாலையில் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ பாதிரியார்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது அதிகாலை புனித யூதா ததேயு தேவாலயத்திலிருந்து ஆரம்பித்து செம்மணி சிந்துபாத்தி மயானம் வரை அமைதி வழி பேரணியாக இடம்பெற்றது. இதன்...
Ad Widget

இப்போது தமிழ் சினிமாவில் காதல் இல்லை!! காமம் தான் இருக்கிறது!

தமிழ் சினிமாவின் 'எவர்கிரீன்' நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘காக்க காக்க’, ‘சில்லுனு ஒரு காதல்’ என இவர்கள் இணைந்து நடித்த படங்கள் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளன. திருமணத்திற்குப் பிறகு இருவரும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது....

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமும் கொந்தளிப்பான தன்மையும் அதிகரித்துள்ளதால், மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின்...

யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கி அதனை காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை யுவதியொருவர் நோய் வாய்ப்பட்ட நிலையில் குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர் நோய் வாய்ப்பட்ட...

வாகிசனின் குரலில் ‘மண்டாடி’ புரோமோ பாடல்!!

இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படத்திற்குப் பிறகு, தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் சூரி, தற்போது 'மண்டாடி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் 'மண்டாடி' புரோமோ பாடல் சமீபத்தில் வெளியாகி, சமூக ஊடகங்களில் அவரது நடனம் மற்றும் உடல் மாற்றத்திற்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறார் சூரி. இத்திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலை எமது...

யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!

யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 3 வருடங்களாக போதைவஸ்துக்கு அடிமையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை காலை மலசலகூடம் சென்று அங்கே மயக்கமுற்றுள்ளார். பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...

பெந்தோட்டயில் பெராமோட்டார் விபத்தில் வௌிநாட்டு பெண் பலி!!

பெந்தோட்ட கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற பெராமோட்டார் விபத்தில் வௌிநாட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய பாலஸ்தீன பெண் ஆவார். பெராமோட்டார் இயந்திரம் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அது கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் ஓட்டுநராகச் செயற்பட்ட கொலம்பிய நாட்டவர் உயிர்தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரேதப் பரிசோதனைக்காக சடலம்...

இலங்கையை வந்தடைந்த 104 புதிய மெட்ரோ பஸ்கள்!!

பொதுப் போக்குவரத்து சேவையை மிகவும் வினைத்திறனான மற்றும் தரமான நிலைக்கு உயர்த்தும் நோக்குடன் இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய 'மெட்ரோ' பேரூந்துகள் நேற்று (29) நாட்டை வந்தடைந்துள்ளன. இந்தப் பேரூந்துகள் சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் தரமானதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்தப் புதிய மெட்ரோ...

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வௌ்ளிப் பதக்கம்!!

கிளாஸ்கோவில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் இலங்கையின் பாலித்த பண்டார வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இறுதிப் போட்டியில் 46.84 மீற்றர் தூரத்திற்கு பரிதி வட்டத்தை எறிந்த பண்டார, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சர்வதேச அரங்கில் சிறப்பானதொரு திறமையை வெளிப்படுத்தியுள்ளதுடன் இது அவரது தனிப்பட்ட சிறந்த பதிவாகவும் அமைந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவையை ஆரம்பிக்க திட்டம்!!

மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவையொன்றை ஆரம்பிக்க 1990 சுவசெரிய அறக்கட்டளை தீர்மானித்துள்ளது. அவசர வைத்திய சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை மிகவும் விரைவாகவும் வினைத்திறனாகவும் சென்றடைவதற்காக இந்தச் சேவையைச் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக வாகன நெரிசல் உள்ள நகர்ப்புறங்களிலும் மற்றும் வீதித் தடங்கல்கள் உள்ள பகுதிகளிலும் இந்த மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை...

ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பித்தது அமெரிக்கா

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. [caption id="attachment_128403" align="aligncenter" width="760"] People watch as smoke rises on the skyline after an explosion in Tehran, Iran, Saturday, Feb....

பிரம்ம முகூர்த்தத்தில் வௌியானது ராமாயணா ட்ரெய்லர்

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் இன்று (30) அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது. முன்னதாக இந்த ட்ரெய்லர் ஜூலை 24 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு தற்பொழுது வெளியாகி உள்ளது. ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக...

தொலைபேசிகளுக்கு அடிமையானமையால் குடும்பக் கட்டமைப்பில் வீழ்ச்சி

தற்போதைய சமூகத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளதன் காரணமாக குடும்பக் கட்டமைப்பு மற்றும் மனித உறவுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கின்றார். திறந்த சந்தைப் பொருளாதாரம் இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு சமூகத்திற்குள் நுகர்வுவாதம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் மூலம் மக்கள் மத்தியில் செயற்கையான ஆசைகளை உருவாக்கி...