- Tuesday
- July 7th, 2026
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காரணமாக, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இரண்டு வார காலத்திற்கு மூடப்படும் என்று துணைவேந்தர் அறிவித்தார். இதற்கு அமைவாக, பல்கலைக்கழக நிர்வாகம், நேற்று (6) முதல் அமுலுக்கு வரும் வகையில், வளாகத்திற்குள் நடைபெறும் செயல்பாடுகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்,...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் டெங்கு நோயால் 40 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது முற்றிலும் பொய் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கூறப்படுவதைப் போன்று 40 பேர் சிறைச்சாலைக்குள் டெங்கு நோய்க்குள்ளாகி உயிரிழந்திருந்தால்,...
செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் மிதமிஞ்சிய பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உலகநாயகன் கமல்ஹாசன் விடுத்த எச்சரிக்கையை அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் முழுமையாக ஆதரித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், சாட்ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவதில் மாணவர்கள் காட்டும் அதிகப்படியான ஆர்வத்தைக் குறித்து...
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் (ATI - Jaffna) 2026ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கணக்கியல் (HNDA), முகாமைத்துவம் (HNDM), ஆங்கிலம் (HNDE), தகவல் தொழில்நுட்பம் (HNDIT) மற்றும் பொறியியல் சார்ந்த (Civil, Electrical, Quantity Surveying) உயர்...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக , வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (06) நடைபெற்ற ஊடக சந்திப்பின்...
இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய விபத்துத் தடுப்பு வாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான (SSP) மனோஜ் ரணகலா...
ரஷ்யாவினால் ஏவப்படும் அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கும், அவற்றை வான்பரப்பில் வைத்து அழிப்பதற்கும் தேவையான ஏவுகணைகளுக்கு உக்ரைனில் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைத் தட்டுப்பாடு காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவினால் உக்ரைன் மீது ஏவப்பட்ட 23 பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் இராணுவத்தால் அழிக்க முடியாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
ஐரோப்பா கண்டம் முழுவதும் நிலவி வரும் கடும் கோடை கால வெப்ப அலையின் தாக்கத்தினால் பிரான்ஸின் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள பிரெஞ்சு பைரினீஸ் மலை அடிவாரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட...
பேலியகொடை - பெதியாகொடை பகுதியில் நுகர்வுக்குப் பொருத்தமற்ற 4,250 தொன் சீனித் தொகையுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே, குறித்த சீனித் தொகை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, சுமார் 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான 85,000...
நடிகர் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படமாக உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்துள்ள சுவாரசியமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' படங்களின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில்...
தமிழக அரசியல் சூழ்நிலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருக்கிறது. த.வெ.க. எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்க 180 கோடி ரூபாவில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செந் தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாரை பொலிஸார் தேடி வருகின்றனர். எனவே த.வெ.க. ஆட்சியை கலைக்க குதிரை பேரம் நடத்துவதாக தி.மு.க. மீது த.வெ.க. வெளிப்படையாக குற்றம்...
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373 பில்லியன் ரூபாய் வரி வருவாய் வசூலித்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. முதல் ஆறு மாதங்களுக்கான வரி இலக்கை விட இது 22 சதவீதம் அதிகம் என்று அதன் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கூறினார். இந்த ஆண்டுக்கான வரி இலக்கு ரூ. 2,206.9 பில்லியன் ஆகும்....
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியின் பாதுகாப்பிற்காக பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். நேற்று (06) இரவு நீர்கொழும்பு சிறைச்சாலையின் நிலைமையை அவதானித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்...
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கிண்ணம் 2026 (FIFA World Cup 2026) தொடரின் Round of 16 சுற்றில், போர்த்துக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி கால்இறுதிப் போட்டிக்கு அதிரடியாக முன்னேறியுள்ளது. டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான ஆட்டத்தில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன்...
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், சென்சார் பிரச்சனைகள் காரணமாக வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்தது. பின்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இதன்பின், வழக்கை வாபஸ் பெற்றாலும்,...
இப்போது உள்ள இளம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப படங்கள் நடித்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூல் வேட்டை நடத்தும் படங்களை கொடுத்து வருபவர் தான் பிரதீப் ரங்கநாதன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெளியாகி இருந்தது. இதில் எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு,...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதற்கமைய, அதற்காக நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தமது அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பிய...
மானிப்பாய் காளி விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த 24 அரச திணைக்கள அணிகள் பங்கேற்ற மென்பந்து கிரிக்கெட் போட்டித் தொடர் வெற்றிகரமாக நடைபெற்றது. இத் தொடரில் மாவட்டச் செயலக அணி தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. இந் நிலையில் நேற்றுமுன்தினம் (05.07.2026) நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டச்...
யாழ்ப்பாணம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளர் திரு. A. P. குணதுங்ஹ அவர்கள் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (06.07.2026) அரசாங்க அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர்பாக...
